Home சூடான செய்திகள் ஒரு வருட இலவச கல்விக்காக கல்லூரி வளாகத்தில் நிர்வாணமாக ஓடிய 18 வயது மாணவி

ஒரு வருட இலவச கல்விக்காக கல்லூரி வளாகத்தில் நிர்வாணமாக ஓடிய 18 வயது மாணவி

35

நெதர்லாந்து நாட்டு எப்.எம் ரேடியோ ஒன்று நூதனமான ஒரு போட்டியை வைத்தது. அங்குள்ள ஒரு கல்லூரி வளாகத்தை நிர்வாணமாக சுற்றி வந்தால், அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு வருட கல்லூரி செலவுக்கு தேவைப்படும் பணம் கொடுக்கப்படும் என்பதுதான் அந்த போட்டி. இந்த போட்டியில் இளம்பெண் ஒருவர் கலந்து கொண்டு கல்லூரியை நிர்வாணமாக சுற்றிவந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் சமீபத்தில் அங்குள்ள பிரபலமான எப்.எம். ரேடியோ ஒன்று வைத்த நிர்வாணமாக ஓடும் போட்டியில் 18வயது இளம் மாணவி ஒருவர் கலந்துகொண்டார். காலில் ஷூ மட்டுமே அணிந்து உடம்பில் துணியில்லாமல் நிர்வாணமாக ஓடினார்.

அவர் ஓடியபோது அவர் பின்னாலேயே எப்.எம்.ரேடியோவின் கேமராமேன் மற்றும் வர்ணனையாளரும் பின்னாலேயே ஓடினார்கள். கல்லூரியை ஒரு சுற்று நிர்வாணமாக சுற்றிவந்த பின்னர் அவருக்கு ஒரு வருட கல்விச்செலவுக்கு தேவையான 10,000 யூரோக்களை பரிசாக வழங்கினார்கள். அந்த பரிசை பெற்றுக்கொண்ட அவர் அதில் ஒரு பகுதி தொகையை நிதியாக ALS அமைப்பிற்கு கொடுத்து ஐஸ் பக்கெட் குளியலும் செய்தார்.

நிர்வாணமாக ஓடிய மாணவிக்கு ஒரு வருட கல்வித்தொகை இலவசமாக கிடைத்தாலும் கல்லூரி நிர்வாகம் அவரது ஒழுங்கீனத்துக்காக ஒரு வார சஸ்பெண்ட் தண்டனை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது