Home சமையல் குறிப்புகள் பேபி கார்ன் பெப்பர் ஃபிரை

பேபி கார்ன் பெப்பர் ஃபிரை

12

தேவையான பொருட்கள்:

பேபி கார்ன் – 10 பெரிய
வெங்காயம் – ஒன்று,
பூண்டு – 8 பல்,
பச்சை மிளகாய் – ஒன்று,
வெங்காயத்தாள் – 4,
ஆலிவ் ஆயில் – சிறிதளவு,
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• பேபி கார்னை வட்ட வடிவமாக வெட்டி வைக்கவும்.

• வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும்.

• வாணலியில் சிறிதளவு ஆலிவ் ஆயில் விட்டு, நறுக்கிய பூண்டு, வெங்காயம், நறுக்கிய பேபி கார்ன், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.

• வெந்தவுடன் வெங்காயத்தாள், மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

• இது மிகவும் சுவையாக இருக்கும்.