Home ஜல்சா அந்த பட நடிகைகளின் மனதை உருக்கும் சோகக் கதை

அந்த பட நடிகைகளின் மனதை உருக்கும் சோகக் கதை

61

நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போல தான் மனித வாழ்க்கையும். நாம் ஒரு நபரின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து அவரது கதாபாத்திரத்தை எடைப் போட்டு விடுகிறோம். மறு பக்கத்தையும் காணும் போது தான் அவர்களது சுய ரூபம் என்ன? உண்மையான குணாதிசயங்கள் என்ன? என்பதை அறிந்துக் கொள்ள முடியும். பார்ன் ஸ்டார் என்றாலே, பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுபவர்கள். செக்ஸிற்கு அடிமையானவர்கள் தான் பார்ன் படங்களில் நடிப்பவர்கள் என்று கருதுகிறோம். ஆனால், நாணயத்தை போல இவர்களது இன்னொரு பக்கத்தை பார்த்தால்… இவர்கள் மீதான நம்முடைய பார்வை நிச்சயம் மாறும். இன்பம் பொங்கி வழியும் துறையாக காணப்படும் பார்ன் இண்டஸ்ட்ரியில் உண்மையில் வலி மட்டுமே அவர்களுக்கு மிச்சமாகிறது… இதோ! தங்கள் துறையில் தாங்கள் கடந்து வரும் துயரம் குறித்து பெண் பார்ன் ஸ்டார்கள் கூறியிருக்கும் வாக்குமூலங்கள்…

வலி! பார்ன் துறையில் வேலை பார்க்கும் பெண்களுக்கு நிறையவே வலி இருக்கிறது. இயக்குனர் தேர்வு செய்யும் தீம் மற்றும் நிலைகளில் உடலுறவுக் கொள்வதால் உடல் ரீதியான நிறைய பிரச்சனைகளை நாங்கள் எதிர் கொள்கிறோம். ஷூட்டிங் துவங்கும் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே நாங்கள் தண்ணீர் டயட்டில் இருக்க வேண்டும். அதாவது வேறு பழங்கள், உணவுகள் உட்கொள்ள கூடாது. எங்கள் மேனியை பாதுகாக்க இப்படியான நிபந்தனைகளுக்கு கீழ்பணிந்து செல்ல வேண்டியது கட்டாயம். பார்ன் மூவி என்பது பார்ப்பவர்களுக்கு மட்டும் தான் இனிமையானதே தவிர, அதில் வாழ்பவர்களுக்கு அல்ல. நாங்கள் கடந்து செல்லும் பாதை மற்றவர்கள் நினைப்பது போல இனிமையானது எல்லா என்பதை மட்டும் ஊர்ஜிதமாக கூற முடியும்.

உண்மையான உடலுறவு அல்ல… நீங்கள் பார்ன் படங்களில் பார்ப்பது உண்மையான உடலுறவு அல்ல. இது ஒரு எண்டர்டெயின்மென்ட் மீடியம். அதாவது மக்களை மகிழ்விக்க தான் இங்கே உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு பார்ன் ஸ்டார்கள் நடித்துக் கொண்டிருக்கும் போது, இயக்குனர், ஒளிப்பதிவாளர், புகைப்படக் கலைஞர், லைட் மேன் மற்றும் ஷூட்டிங் நபர்கள் என பலர் சூழ்ந்திருப்பார்கள். அவர்கள் முன்னிலையில் உடலுறவில் ஈடுபடுவது என்பது மிகவும் கடினமானது. அதில் போலியாக ரியாக்ஷன் வேறு தரவேண்டும். ஒட்டுமொத்த பார்ன் படமும் ஏறத்தாழ பத்து இருபது பேர் முன்னிலையில் தான் எடுக்கப்படுகிறது. இது அசௌகரியமானது எனிலும், இது தான் எங்கள் வேலை. இதற்காக நாங்கள் எதையும் செய்தாக தான் வேண்டும்.

தனிமை! எங்களுக்கு உறவுகளோ, நட்புகளோ என பெரிதாக யாரும் இருக்க மாட்டார்கள். பெரும்பாலும் பார்ன் ஸ்டார்களும் வட்டமானது குறுகியதாக தான் இருக்கும். எங்கள் துறை சார்ந்த நண்பர்களை தாண்டி வெளியுலகில் எங்களுக்கு நட்பு பெரிதாக இருக்காது. நாங்களே விரும்பினாலும், எங்களுடன் சேர்ந்து வெளியே வர, பழக யாரும் முன்வர மாட்டார்கள். எங்களை பார்த்தாலே அவர்களுக்கு செக்ஸ் என்ற எண்ணம் தான் முதலில் வரும். இதனால், பெரும்பாலான பார்ன் ஸ்டார்கள் தனிமை மற்றும் பரிதாபகரமான வாழ்க்கை தான் வாழ்ந்து வருகிறார்கள். யார் ஒருவருக்கும் தனிமை எனும் நிலை வரக் கூடாது.

பால்வினை நோய் அச்சம்! எங்களுக்குள் இருக்கும் பெரிய அச்சமே பால்வினை நோய் தான். ஒவ்வொரு மாதமும் நாங்கள் பால்வினை நோய் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலான பார்ன் ஸ்டார்கள் இந்த பரிசோதனை செய்துக் கொள்வதில்லை. ஒருவருக்கு பால்வினை நோய் தொற்று ஏற்பட்டது அறியவந்தால், அவர்களை உடனே துறையில் இருந்து வெளியேற்றி விடுவார்கள். அதன் பிறகு மருத்துவ செலவு, சிகிச்சைக்கு என எந்த ஒரு இயக்குனரும், தயாரிப்பாளரும் உதவவும் முன் வர மாட்டார்கள். பார்ன் துறை பற்றி முழு விபரம் தெரியாமல் உள்ளே வந்து பெரிதும் பாதிப்புக்குள்ளானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சுகாதாரம்! இங்கே ஒருவர் திடீரென பெரிய ஸ்டார் ஆகிவிடுவார். அதன் பிறகு அவர்களுக்கு நிறைய ஷூட்டிங் வாய்ப்பு வரும். ஒரே நாளில் இரண்டு மூன்று படங்களில் நடிக்கும் அளவிற்கு பிஸியாக மாறிய நபர்களும் இருக்கிறார்கள். இதனால், பல சமயங்களில் யாரும் சுய சுகாதாரத்தை பேணிக் காப்பது இல்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண் பார்ன் ஸ்டார்கள் தான். நேரம், டேட் கருதி இதை இயக்குனர், தயாரிப்பாளர்களிடம் பெரிய குற்றமாக எடுத்துக் கூற முடியாது. அப்படியே கூறினாலும் அடுத்த முறை இப்படியான அசௌகரியங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்பார்கள்.