Home சூடான செய்திகள் பெண்களே திருமணத்துக்கு முன் கட்டில் உறவை பகிர்ந்துகொள்ளவேண்டாம்

பெண்களே திருமணத்துக்கு முன் கட்டில் உறவை பகிர்ந்துகொள்ளவேண்டாம்

152

சூடான செய்திகள்:காதல் என்பது எல்லா வயதினருக்கும் வரக்கூடிய ஒன்று தான். ஆனால் அந்த காதலை எவ்வளவு கண்ணியமாக கொண்டுபோக வேண்டும் என்பது தான் இன்றய காலகட்டத்தின் அவசியம்.

மனிதர்களாகிய அனைவர்க்கும் ஒரு கட்டத்தில் காம உணர்வு உண்டாகும். அந்த காம உணர்வை கட்டுப்படுத்தி காதலில் எப்படி கடைசி வரை மகிழ்ச்சியாய் இருக்கிறோம் என்பது தான் தற்போதைய வாழ்க்கையின் முக்கியமான ஒன்று.

பொதுவாக காதலர்கள் தனிமையில் இருக்கும் பொது அவர்கள் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்துவது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். அப்படி கட்டுப்படுத்த முடியாமல் ஏற்படும் உடலுறவுகளினால் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளமாக அமையும்.

திருமணமான தம்பதிகள் இடையே தாம்பத்தியம் என்பது அவசியமான ஒன்று. மேலும் இது கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் மற்றும் இவர்களின் ஒற்றுமையை இணைக்கும் பாலமாக திகழ்கிறது.

ஆனால் காதல் செய்யும் காலத்தில் காமத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது அவசியம் என்கின்றனர் காதல் பற்றிய ஆய்வாளர்கள்.

காதலிக்கும் போது உடல் உறவு கொண்டால் அட இவ்வளவுதானா என்ற ஒரு மண நிலை உருவாகி இருவர்களும் பிரியும் நிலை கூட ஏற்படலாம்.

ஆண்களது செக்ஸ் ஆர்வமும், பெண்களின் செக்ஸ் ஆர்வத்தை விட மிகவும் வித்தியாசமானது. ஒரு பெண்ணிடம் உறவு கொண்ட பின் அதைவிட சிறப்பாக வேறு பெண்ணிடம் சுகம் கிடைக்குமா என அலையும் மனம் ஆண்களுக்கு உண்டு. ஆனால் திருமணத்திற்கு பிறகு தனக்கு மனைவி இருக்கிறாள் என்ற கட்டுப்பட்டால் அந்த எண்ணம் ஆண்களுக்கு மாறும்.

ஆனால் திருமணத்திற்கு முன்னரே காதலிக்கும் போது அவர்கள் உறவு கொண்டால் கண்டிப்பாக இவர்களுக்கிடையே பிரிவு ஏற்படும். அப்படி பிரிவு ஏற்பட்டால் ஆண்கள் எளிதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வார்கள்.

ஆனால் பெண்கள் இயல்பாகவே ஒரே ஒருவரிடம் மட்டுமே உறவு கொள்ள விரும்புவார்கள். அப்படி இருக்கும் நிலையில் காதலிக்கும்போது உறவு ஏற்பட்டுவிட்டால் வேறொருவரை நினைத்துக்கூட பார்க்கமாட்டார்கள். எனவே அவர்களின் வாழ்க்கை சீரழியும் நிலை வந்துவிடும். எனவே காதலிக்கும்போது கவனமாய் இருக்கவேண்டியது பெண்கள் தான்.

திருமணம் முடித்த பின்னர் அவர்களுக்குள் புதிதாக ஒன்றுமில்லை என்பதால், வாழ்க்கையில் இருக்கும் சுவாரஸ்யம் குறைந்து விடும். உடலுறவு செய்யும் எண்ணம் குறைந்து விடும். எனவே திருமணத்திற்கு முன்பு கண்ணியமாக இருப்பதே சிறந்தது.

Previous articleஉடல் பருமனை இலகுவான குறைக்க தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி
Next articleதிருமணத்திற்கு முன்னரே உடல் தொடர்பு கொள்ள ஆசைப்படும் இளையோர்