Home இரகசியகேள்வி-பதில் எனக்கு தாம்பத்தியத்தின்போது பயங்கரமான நீர்க் கடுப்பு உண்டாகிறது டாக்டர்?

எனக்கு தாம்பத்தியத்தின்போது பயங்கரமான நீர்க் கடுப்பு உண்டாகிறது டாக்டர்?

322

டாக்டர் கேள்விகள் பதில்கள்:என்வயது 14. வயதுக்கு வந்து 2 ஆண்டுகளாகிறது. மார்பகங்கள்பெருத்துத் தொங்கிக் காணப்படுகின்றன. என்ன தீர்வு? – பெயர், ஊர் சொல்ல விரும்பாத வாசகி.

உடற்பயிற்சி ஒன்றுதான்ஒரே தீர்வு. மார்பகங்களில் உள்ளவை வெறும் கொழுப்புத் திசுக்கள். மார்பகக்கீழ் தசைகளுக்கான பயிற்சிகளைச் செய்தால் ஓரளவு சரியாகும். சரியான அளவுள்ள, பட்டைவைத்த பிரா அணிவதும் அவசியம். அளவைக் குறைக்கிற சிகிச்சைகள்அறிவுறுத்தத் தக்கவையல்ல.
————–

என் வயது 21. கணவருக்கு 28. திருமணத்தன்றே தலைவலி ஆரம்பித்து விட்டது.பத்து வருடங்களாக சுய இன்பப் பழக்கம் இருந்ததால் என் கணவரால் முதலிரவன்றே உறவில் ஈடுபட முடியவில்லை. இன உறுப்பில் வலி இருக்கிறது என்கிறார்.எனக்கோ செக்ஸ் ஆசை அதிகமாக இருக்கிறது. நான் அவரை விவாகரத்து செய்து விடலாமா? அல்லது அவரைக் குணப்படுத்த முடியுமா? – பெயர் வெளியிட விரும்பாதநாகர்கோயில் வாசகி.

கல்யாணச் சடங்குகளாலும், அதனால்ஏற்படுகிற களைப்பாலும் பெரும்பாலான தம்பதியருக்கு முதலிரவுமுழுமையான இரவாக அமைவதில்லை. கல்யாணத்தன்றே உடல் சங்கமம் நடந்தாக வேண்டும்என்றில்லை. உடலும், உள்ளமும் சகஜ நிலைக்குத் திரும்பிய பிறகு உறவில்ஈடுபடலாம். உங்கள் விஷயத்திலும் அப்படி நிகழ்ந்திருக்கலாம். கணவரின் சுயஇன்பப் பழக்கத்துக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.மனம்தான் காரணம். தன் மனைவியை திருப்திப்படுத்த முடியுமா, ஆண்மையைநிரூபிக்க முடியுமா என்கிற பயத்தால்கூட உங்கள் கணவர் உறவைத் தவிர்க்கலாம்.அவருக்குத்தைரியம் சொல்லுங்கள். செக்ஸ் மருத்துவர் அல்லது மனநலமருத்துவரிடம் அழைத்துச் சென்று கவுன்சலிங் செய்யலாம். அவராலும் ஆரோக்கியமானசெக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட முடியும் என நம்பிக்கை அளியுங்கள். உறுப்புகளில்வலி இருப்பதாகச் சொல்வதற்கும் மருத்துவரிடம் சரியான சிகிச்சை பெற்றுதீர்வு காணலாம்.

—————————
என் வயது 22. திருமணமாகவில்லை. மாதவிலக்கின்போது கட்டி, கட்டியாக ரத்தம் வெளியேறுகிறது.இதனால் பாதிப்பு ஏதும்உண்டா? – எம். மனோன்மணி, டி.எம்.பாளையம்.

அளவுக்கதிக இரத்தப்போக்கு இருக்கிறதா என்றும் பாருங்கள். பொதுவாக இது ஒரு பெரிய பிரச்சினையேஇல்லை. கழிவுத் திசுக்கள் அதிகமிருந்தால், இப்படிகட்டி, கட்டியாகஇரத்தம் வெளிறேலாம். கர்ப்பப்பையில் கட்டி ஏதேனும் இருந்தாலும் இப்படிஇருக்கலாம். ஹார்மோன் கோளாறு உள்ளதா என்றும் பார்க்கவும். இது எல்லாமேகுணப்படுத்தக் கூடியவையே. இரத்தம் அதிகம் வெளியேறினால் இரத்த சோகை ஏற்படவாய்ப்புகள் அதிகம். எனவே இரும்புச்சத்து, ஃபோலிக்அமிலம், வைட்டமின் ஏபோன்றவை அதிகமுள்ள உணவுகளை நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். பயப்படவேண்டிய அவசியமில்லை

——————–
எனக்குப் பதினேழு வயதில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்தநான்கு வருட காலமாக வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கிறது. இதனால் எப்போதும் தர்ம சங்கடமாகவே உணர்கிறேன். என்னதான் தீர்வு? – வி. சங்கீதா, சென்னை-30.

அதிக சூடுதான் வெள்ளைப்படுதலுக்குக் காரணம். உணவில் உப்பு, காரம்தவிர்க்கவும். வாரம் ஒரு முறை புளித்த கீரை சேர்த்துக் கொள்ளவும். தினம்ஒரு பெரிய நெல்லிக்காயும், கொஞ்சம்உலர்ந்த திராட்சையும் சாப்பிடவும். அடிக்கடி பொன்னாங்கண்ணிக்கீரை சேர்த்துக் கொள்ளவும். வெள்ளை முள்ளங்கியை வேக வைத்த தண்ணீரைக்குடிக்கவும். வாழைத் தண்டும், பயத்தம் பருப்பும் வேக வைத்து கூட்டுமாதிரி சமைத்து சாப்பிடவும். நீர்மோர் நிறைய குடிக்கவும். ஊறுகாய் பக்கமேபோகாதீர்கள். உணவில் காய் கறிகள், பழங்கள், கீரைமூன்றும் அதிக மிருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். அமுக்கராக்கிழங்கு மாத்திரையை வேளைக்கு ஒன்றாக தினம் மூன்று சாப்பிடவும். மாதுளம்பழத்தின் ஓட்டைக் காய வைத்துப் பொடித்து ஒரு சிட்டிகையை தண்ணீரில் கலந்துமூன்று வேளைகள் குடிக்கவும். அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தினம் இரண்டு வேளைகள் உள்ளாடைகளை மாற்றவும். காட்டன்உள்ளாடையையே அணியவும். மருந்துக் கடைகளில் பொட்டாசியம் பர்மாங்கனேட் என்றுகிடைக்கும். அதில் சிட்டிகையை எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்துஅந்தரங்க உறுப்பை சுத்தம் செய்யவும். போதிய அளவு ஓய்வு, சரிவிகிதஉணவு என எல்லாம் இருந்தும் தொடர்ச்சியாகவெள்ளைப்படுகிற பட்சத்தில் ஸ்கேன் செய்து பார்க்கலாம.

——————-

என் வயது 29. சமீப காலமாக இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட அடுத்த சில நாட்களில்எனக்கு பயங்கரமான நீர்க் கடுப்பு உண்டாகிறது. எதனால் இப்படி? சிகிச்சைஉண்டா? – சி. ஜானகி, மேட்டூர்.

மண்பானை செய்கிறவர்களிடம்சுத்தமான களிமண் வாங்கி, அதைத் தேங்காய் ஓட்டில் போட்டு சுடுநீரில்குழைத்து இரவு படுக்கும் முன்பாக தொப்புளைச் சுற்றித் தடவிக் கொண்டு, காலையில்குளித்து விடவும். இதை வாரம் மூன்று முறைகள் செய்யலாம். முள்ளங்கிவேக வைத்த தண்ணீரில் சர்க்கரை சேர்த்துக் குடியுங்கள். உணவில் அடிக்கடிபயத்தம் பருப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடலாம்.முடிந்தால் மண் சட்டியில் சமைத்து சாப்பிடவும். தினம் காலையில்கைப்பிடியளவு கொத்த மல்லித் தழையை பச்சையாக சாப்பிடவும். நாட்டு அவரைக்காய், பீன்ஸ், முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்.