Home ஜல்சா வெளிநாட்டு பெண்கள் திருமணம் ஆனா ஆண்களுடன் டேட்டிங் செல்ல காரணம்

வெளிநாட்டு பெண்கள் திருமணம் ஆனா ஆண்களுடன் டேட்டிங் செல்ல காரணம்

106

ஜல்சா செய்திகள்:டேட்டிங் எல்லாம் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே காணப்படும் கலாச்சாரம், நம் நாட்டில் இன்னும் அப்படி எல்லாம் எதுவுமில்லை என்று இன்னமும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள முடியாது. இந்தியாவின் முன்னணி நகரங்களில் இளம் ஆண், பெண்கள் டேட்டிங், லிவ்-இன் உறவகளில் இருப்பதை சர்வ சாதரணமாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால்.. சில கல்லூரி மாணவ – மாணவியர் படிக்கும் காலத்திலேயே அபார்ஷன் லெவலுக்கு செல்கிறார்கள். இதெல்லாம் கலாச்சார சீர்கேடாக நாம் பார்க்கிறோம். வளரும் தலைமுறையில் சிலர் இதை ரிலேஷன்ஷிப் அப்டேட்டாக காண்கிறார்கள். இந்த ஆண்டிராயிடு யுகத்தில் உறவுகளும் செயலி இன்ஸ்டால் செய்து செக் செய்து விரும்பும் படி இல்லை என்றால் உடனே அன்-இன்ஸ்டால் என்ற வகையில் மாறி வருகிறது.

சில ஆண்டுகளாக நம் நாட்டில் துளிவிட்டிருக்கும் இந்த டேட்டிங்.. அயல் நாட்டில் எப்படி இருக்கிறது… அயல் நாட்டு பெண்கள் சிலர் திருமணமான ஆண்களுடன் டேட் செய்ய விருப்பம் தெரிவிக்கிறார்கள். அவர்களது இந்த விருப்பத்திற்கு காரணமாக அவர்கள் முன் வைக்கும் கருத்துக்கள் என்ன (?) என்பதனை தான் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்..

#1 நானும் என் எக்ஸ் காதலனும் சின்ஸியராக காதலித்து வந்தோம். எங்கள் ஐந்து வருட காதல் வாழ்க்கை பிரிவில் முடிந்தது. நான், திருமணமான ஆணுடன் டேடிங் செய்து வருகிறேன். இதில் எனக்கு எந்த விதமான அச்சமும் இல்லை. மேலும், இதனால், மீண்டும் எனக்கு மனவேதனை ஏற்பட போவதுமில்லை.

#2 நான் திருமணமான ஆண்களுடன் தான் டேட் செய்கிறேன். இதுக்குறித்து யார், என்ன நினைப்பார்கள் என்பது குறித்த கவலை எனக்கு இல்லை. திருமணமான ஆண்கள் எப்போதுமே தொல்லை செய்துக் கொண்டிருக்க மாட்டார்கள். எந்த ஒரு விளக்கவுரையும் அளிக்காமல் எனக்கு என்ன வேண்டுமோ அதை நான் செய்துக் கொள்ள இயலும். அவரவர் உலகில் அவரவர் விருப்பத்தின் படி வாழ இயலும்.

#3 நான் ஏன் திருமணமான ஆண்களுடன் டேட் செய்கிறேன்? என்ற கேள்விக்கான என் பதில் மிகவும் எளிமையானது. ஆம்! எனக்கு திருமணமான ஆணுடன் டேட் செய்வது பிடிக்கும். ஏன் என்றால், அவர்களால் என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று கேள்வி கேட்க முடியாது.

#4 திருமணமான ஆணுடன் டேட் செய்வதை நான் விரும்புகிறேன். அவர்கள் வெளிப்படையாக இருக்கிறார்கள். என் ப்ளஸ், மைன்ஸ் குறித்த கவலைகள் இல்லை. சிறப்பான செயல்கள் செய்தால் பாராட்டுகிறார்கள், ஊக்கம் அளிக்கிறார்கள். அதுத்தவிர வேறு என்ன வேண்டும்.

#5 திருமணமான் ஆண்களுடன் டேட் செய்வதிலும் பிரச்சனை இருக்கிறது. ஆனால், பெரும்பாலும் ஒரே ஒரு பிரச்சனை தான் இருக்கும் திருமணமான ஆண்களுடன் டேட் செய்தால், காதலர் தினத்தை தனியாக தான் கொண்டாட வேண்டும்.

#6 ஏற்கனவே திருமணமான ஆணுடன் டேட் செய்வது என்பது தைரியமான போல்டான முடிவு. நான் திருமணமான ஆணை டேட் செய்கிறேன். இதனால் எனக்கு என்ன நன்மை கிடைக்கிறது எனில், நான் கமிட்டாகி இருந்தாலும் அதனால் எந்த பாதிப்போ, தொல்லையோ இல்லை. ஆனால், தேவையான அக்கரையும், அட்டேன்ஷனும் கிடைக்கிறது.

#7 நான் ஏன் திருமணமான ஆண்களை டேட் செய்கிறேன்? என்று கேட்டால்…. திருமணமான ஆண்கள் எப்படியும் என்னை திருமணம் செய்துக் கொள் என்று கேட்க போவதில்லை, அவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு பிரிய போவதுமில்லை. எப்படியும் கடைசியில் அவர்கள் பிரிந்து சென்றுவிடுவார்கள். அவர்கள் பின் கெஞ்சவோ, பிரிவை குறித்து வருந்தவோ அவசியம் இல்லை.

#8 திருமணமான ஆணுடன் ஏன் டேட் செய்கிறேன் என்றால், எனக்கு பணம் தேவை. பெரும்பாலான பெண்கள் திருமணமான ஆண்களுடன் டேட் செய்வதன் காரணம் பணம் தான். ஆனால், யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இந்த காரணத்திற்காக தான் நிறைய பெண்கள் திருமணமான ஆணுடன் டேட் செய்கிறார்கள். இது தான் உண்மை.