Home சூடான செய்திகள் இந்த மூணு விஷயத்துல நீங்க சரியா இருந்தா…

இந்த மூணு விஷயத்துல நீங்க சரியா இருந்தா…

40

இல்லறம் நல்லறமாக சிறக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால், அனைவரின் இல்லறமும் சிறக்கிறதா என்பது பெரிய கேள்விக் குறி தான். சுய வாழ்வு மட்டுமல்ல, இல்லறம் நல்லமுறையில் அமைவதற்கும், புயல் காற்று வீசவதற்கும் கூட நாம் தான் காரணம். நாம் செய்யும் செயல்கள், செய்ய தவறிய செயல்கள் தான் நமது வாழ்க்கையில் தாக்கத்தை உருவாக்குகின்றன.

கணவன், மனைவி மத்தியில் போட்டிப் பொறமை துளியும் இருக்கக் கூடாது. காதல் மற்றும் அன்பு செலுத்துவதில் போட்டியைக் காட்டுவது கூட யாரேனும் ஒருவரை நாம் குறைவாக அன்பு செலுத்துகிறோமா என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்பட காரணமாக இருந்துவிடும். எனவே, இல்லறம் நல்லறமாக இருக்க வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள்….

ஒப்புக்கொள்தல்
கணவன், மனைவி உறவில் எதுவாக இருப்பினும் அதை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை இருத்தல் வேண்டும். இல்லையேல் உறவில் காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. உங்கள் துணையுடன் வீம்புக்கு செயல்படுவதால் எந்த பலனும் கிடையாது. எனவே, ஒப்புக்கொள்ளுங்கள், அது எவ்வளவு பெரிய தவறாக இருப்பினும் கூட, சூழ்நிலை அறிந்து எடுத்துக் கூறுங்கள்.

பழிவாங்குதல்
ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை இல்லாமல் இருத்தல், காலப்போக்கில், வன்மம் மற்றும் பழிவாங்கும் குணத்தை அதிகரிக்கும் கருவியாக மாறிவிடும். இதனால் உங்கள் உறவில் விரிசல் ஏற்படலாம்.

மனநிலை மாற்றங்கள்
மேலும், உங்கள் மீது வைத்திருக்கும் அன்பு, காதல் போன்றவை குறைய ஆரம்பித்து, கோபம் அதிகரிக்கலாம். இல்லற உறவில் நிறைய மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம்.

உறுதுணையாக இருத்தல்
பரஸ்பர உறவு நீரினை போல தங்குதடையின்றி அமைய வேண்டும் எனில், ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். தன்னார்வமாக சென்று உதவி செய்ய வேண்டும். அவர் கேட்கும் வரை காத்திருக்கிறேன் என்று இருப்பது நல்ல பரஸ்பர உறவிற்கு உகந்தது அல்ல.

வீட்டு வேலைகளில் உதவுதல்
இழுத்துப்போட்டு கொண்டு அனைத்து வேலைகளும் செய்ய வேண்டும் என்று எந்த பெண்ணும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், குறைந்தபட்சம் சிறு சிறு உதவிகள் செய்வது, தங்கள் கணவன் தன் மீது அன்பாக இருக்கிறான், தன் வேலைகளையும் கூட பகிர்ந்துக் கொள்கிறான் என்ற மன நிறைவை தரும் என பெண்கள் கூறுகிறார்கள்.

சமநிலை அளித்தால்
நான் தான் பெரிது, நீதான் பெரிது என்ற போக்கில்லாமல், நாம் இருவரும் சமம் என்ற சமநிலையை உருவாக்க வேண்டும். அப்போது தான் உறவு மேம்படும், இருவர் மத்தியிலான இறுக்கம் பெருகும்.

ஈடுபாடு காட்டுதல்
உங்கள் துணை சமைக்கும் உணவில் தொடங்குகிறது உங்கள் ஈடுபாடு. என்ன சமைக்கலாம் என்ற கேள்விக்கு எதுவாக இருப்பினும் சரி என்ற விடையளிக்க வேண்டாம். அவரது சமையலில் விருப்பம் காண்பியுங்கள். உங்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து தரக் கூறுங்கள்.

அவர்களை விமர்சியுங்கள்
அவர்கள் உடுத்தும் உடையில் இருந்து, செயல்கள் வரை நீங்கள் அனைத்தையும் விமர்சிக்க வேண்டும். விமர்சனம் செய்துவிட்டு அப்படியே விட்டுவிட கூடாது. அதற்கான பாராட்டு அல்லது திருத்தங்கள் கூற வேண்டும் அதுதான் முழுமையான விமர்சனம்.

வாழ்க்கை எனும் ஓடம்
இவற்றை எல்லாம் நீங்கள் தக்கவைத்து செய்து வந்தால் உங்களது வாழ்க்கை எனும் ஓடம் ஆற்றில் எந்த ஒரு தங்குதடையுமின்றி பயணிக்கும்.