Home உறவு-காதல் எப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…

எப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…

32

வாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் பல இடைஞ்சல்கள் வரும். ஆனால் உறவு என வரும் போது, எதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்தி உறவுகளை இழந்து விடக்கூடாது என அதிக கவனம் செலுத்துவோம்.

உறவுகளுக்கிடையே பிரச்சனைகள் வரவே கூடாது என நினைப்போம். உறவான பின்பு அதை பொக்கிஷமாக கருதுவோம்.

உறவுகள்
நாம் எதிர்பாராத நேரத்தில் பிரச்சனைகள் எழும். பின்பு அன்பானவர்களுடனான உறவை காப்பாற்ற போராடுவோம். முழுமையான, எந்த பிரச்சனையும் இல்லாத உறவு என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். நம்மை போலவே அனைவரும் உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், நம் உறவுகளை அப்படியே மகிழ்ச்சியாக தொடர சில அறிவுரைகள் இருக்கின்றன. அவற்றை அறிந்து கொள்வதன் மூலம்,உங்கள் உறவை நீடித்து நிலைக்க செய்யலாம். உங்கள் உறவானது புதிதோ பழையதோ , பிரச்சனைகளின்றி சுமூகமாக செல்ல இந்த டிப்ஸ் உதவும்.

உங்கள் எல்லையை தெரிந்துகொள்ளுங்கள் (Know Your Limit)
இது மிகவும் முக்கியம். உறவுக்காக நீங்கள் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அனைத்தும் செய்யலாம். ஆனால், அதன் பிறகு அனைத்துக்கும் உங்களையே எதிர்பார்ப்பார்கள் என்பதை நினைவிற்கொள்க. எனவே, செய்ய முடியாது என மறுப்பதில் தவறு இல்லை. உங்களிடம் அவர் எதிர் பார்க்கும் ஒன்று, உங்களுக்கு தேவையில்லை என தோன்றினால் தயக்கமின்றி மறுத்துவிடுங்கள். இதனால் உங்கள் மீதான அவர்களின் அன்பு குறைந்து விடாது. இந்த காரணத்திற்காக அவர் உங்களை பிரிய நினைத்தால் விட்டுவிடுங்கள். இல்லையென்றால் அதன் பின் அந்த உறவிற்கு மதிப்பில்லை.

மதிப்பும் பாதுகாப்பும் கொடுங்கள் (Treat Your Partner With Respect And Care)
உறவுகள் ஏதாவது கேட்டு நாம் முதலில் மறுத்தாலும், பிறகு ஒரு குறிப்பிட்ட புள்ளியில் உருகி விடுவோம். இதுபோன்ற செயல்கள் மிக தவறானது. இவ்வித உறவுகள் தேவையே இல்லையென விலகி விடுங்கள். உங்களை பற்றி கவலை படாமல், அவர்களை பற்றியே நினைப்பவர்கள் தேவையே இல்லை. எப்போதும் உறவுகளிடம் சரியாக நடந்துகொள்ளுங்கள். உங்களுக்காக செயல்படுங்கள் ஆனால் உறவுகள் மீதும் கவனம் செலுத்துங்கள்.இதன் மூலம் எப்போதும் உங்கள் உறவு நீடித்து நிலைக்கும்.

நியாயமான சண்டைகள் (Have Justified Fights)
உறவுகளில் சண்டைகளும் வாக்குவாதங்களும் பொதுவானது தான். உறவில் உள்ள பிரச்சனைகளுக்காக சண்டையிடுங்கள். ஆனால் ஒருபோதும் அவர்களை விட்டுகொடுத்துவிடாதீர். என்ன பிரச்சனையாக இருந்தாலும், சரியான வாக்குவாதங்களும் நியாயமான சண்டைகளும் தான் தீர்வு காண உதவும். ஆனால் அடிப்படையே இல்லாமல் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி சண்டையிடுவது உறவில் எப்போதும் நல்லதல்ல. எனவே, நியாயமானவற்றிக்காக சரியான வாக்குவாதங்களும் சண்டைகளும் இருக்கவேண்டும்.

நகைச்சுவை உணர்வை இழக்காதீர் (Never Run Out Of Humor)
மகிழ்ச்சியான உறவுகள் தான் நீடித்து நிலைக்கும். உறவுகளை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால், பல்லாண்டுகள் உறவு நீடிக்கும். நகைச்சுவை உணர்வு மகிழ்ச்சியை கூட்டி மக்களை சிரிக்க வைக்கிறது.இதன் மூலம் உறவு வலுவாகும். நகைச்சுவைகள், கேலிக்கதைகள், என எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தால் உறவுவில் விரிசல் ஏது?

அன்புகாட்டுங்கள் ( Make Love As Much As You Can)
எவ்வளவு அன்பு காட்டுகிறோமோ அவ்வளவு நெருக்கமாக முடியும். அன்பை அதிகரிக்க வல்லுநர் சொல்லும் வழி, முடிந்த அளவுக்கு செக்ஸ் வைத்துக்கொள்வது தான். அதன் மூலம் உங்கள் ஹார்மோன்கள் சமநிலையடைந்து உங்களை நிலையாக வைத்திருக்கும். அதன் மூலம் உறவின் அதிகபட்ச உணர்வை பெறமுடியும். செக்ஸ் தான் உறவின் உச்சபட்ச நிலை. அந்த போதை தான் எப்போதும் உங்கள் இணையை உங்களுடன் பிரியாமல் வைத்திருந்து அன்பும் காதலும் நிலைக்கச் செய்யும். இதுவே எப்போது பரிந்துரைக்கப்படுகிறது.

நேர்மையே உண்மையான பரிசு (Honesty Is A Reward For Your Relationship)
நேர்மை நம்பிக்கையை நிலைநிறுத்துவதால், உறவின் உண்மையான பரிசு நேர்மையே. நேர்மையாக இருப்பதன் மூலம் ஒருவருக்கொருவர் நம்பிக்கையின் தூணாக மாறிவிடுவர். என்னதான் உண்மை கசந்தாலும், உறவில் இரகசியங்களோ, மறைக்கப்பட்ட தகவல்களோ இருக்கவே கூடாது. அப்படி மறைப்பது பின்னர் நம் நம்பிக்கையை தகர்த்து உறவில் விரிசலை ஏற்படுத்தும்.

கவனம் செலுத்துங்கள் (Pay Attention To Each Other)
ஒவ்வொரு நிமிடமும் உறவுகளின் மீது கவனம் செலுத்துவதால், ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு வாழலாம். அவர்களுக்கு என்ன உணவு பிடிக்கும், எவ்வாறு உடை அணிந்தால் பிடிக்கும் என அத்துணையும் தெரிந்து வைத்துக்கொண்டால் அன்பு மழை பொழியும். சின்னசின்ன விசயங்கள் தான் பெரிய மாற்றங்களுக்கு வித்திடும்.

நன்றியுடன் இருங்கள் ( Be Grateful To Each Other)
உங்களுக்கு அவர்களின் உறவும், அவர்களும் எவ்வளவு முக்கியம் என புரிய வையுங்கள். இதன் மூலம் ஒருவருக்கொருவர் நன்றியுடன் இருந்து உறவை அதன் வழியில் செலுத்துங்கள். இந்த 8 அறிவுரைகளும் கடைபிடித்தாலே பிரச்சனைகள் இல்லாத, எப்போதும் ரொமாண்டிக்காக, நீடித்த அன்புடன் உங்கள் உறவுமுறையை கொண்டு செல்ல முடியும்.