Home சூடான செய்திகள் குளிர் கால உடலுறவில் ஆண்களுக்கு ஆர்வம் அதிகம்

குளிர் கால உடலுறவில் ஆண்களுக்கு ஆர்வம் அதிகம்

35

affairகுளிர் காலத்தில் ஆண்கள் உடலுறவுக் கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுவதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

மனித பாலியல் உளவியல் விதிமுறைப்படி, ஆண்கள் குளிர் காலத்தில் கூடுதல் உடலுறவுக் கொள்ள விரும்புவதாக புதிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் ஓராண்டில் 114 ஆண்களிடம் நடத்திய ஆய்வில் குளிர் காலங்களில் பெண்களின் ஆபாச புகைப்படங்களையே ஆண்கள் தேர்வு செய்ததாகவும், கோடைக் காலத்தை விட குளிர் காலத்தில் தான் பெண்கள் மீது அதிகம் ஈர்ப்பு ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

3 மாதங்களுக்கு ஒரு முறை சில புகைப்படங்களை ஆண்களிடம் கொடுத்து அதனை மதிப்பிடும்படி கேட்கப்பட்டது. அதில் ஒரு பாகமாக பெண்களின் முகங்கள் கொண்ட புகைப்படங்கள், மற்றொரு பாகமாக பெண்களின் உடல் தெரியும்படி ஆடை விலகிய புகைப்படங்கள் இடம்பெற்றன. இந்த ஆய்வில், பெண்களின் முகங்கள் கொண்ட புகைப்படத்தை விட மற்ற புகைப்படங்களை தான் ஆண்கள் அதிகம் மதிப்பிட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக டிசம்பர் மாதங்களில் பெண்கள் மீதான ஈர்ப்பு ஆண்கள் மத்தியில் கூடுதலாக உணரப்பட்டதாக ஹார்வார்ட் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் லேஹ்மில்லர் கூறியுள்ளார். காலமாற்றத்திற்கு ஏற்ற வகையில் உளவியல் ரீதியாக பாலியல் சிந்தனைகளில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதை அறிவதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், குளிர் காலத்தில் உடலுறவுக் கொள்ளும் போது தம்பதிகள் கூடுதல் இன்பம் பெறுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.