Home சமையல் குறிப்புகள் பிரியாணி சோறு உதிரி உதிரியாய் வர இதை சேர்க்க வேண்டும்

பிரியாணி சோறு உதிரி உதிரியாய் வர இதை சேர்க்க வேண்டும்

236

சமையல் குறிப்பு:பிரியாணியை பிடிக்காதவர் இருப்பார்களா… ட்ரீட் என்றதும் எங்க பிரியாணி டேஸ்டியாக கிடைக்கும் என்றே தேடுவோம். எத்தனை முறை சாப்பிட்டாலும் அலுப்பாகாத உணவு, பிரியாணி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தேடி சுவைப்பதும் பிரியாணியைதான். ஆனால் இதை அன்றாடம் சாப்பிடலாமா என்றால்… கூடாது என்றே மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதே பிரியாணியை வீட்டிலியே சமைத்து சாப்பிட நினைப்பவர்களுக்கு கடுப்பாகும் விஷயம் என்னவென்றால் ஹோட்டலில் வரும் பிரியாணி போல் வீட்டில் செய்யும் பிரியாணி பளபளப்பாக, ஒன்றோடு ஒன்றாக சேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

பிரியாணிக்கு தேவையான பாஸ்மதி அரிசியை நெய்யில் வதக்கி எடுத்துக் கொண்டால் போது தவறுதலாக அதிக விசில் விட்டாலும் சரி, பிரியாணி குழைய வாய்ப்பே இல்லை.

சமையல் குறிப்புகள்:

1. பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.

2.காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

3. காளான்களை அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கக்கூடாது ஏனென்றால் அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும்.

4. தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரை‌த் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.

5. ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

6. முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீ‌ஸ்பூன் வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.

7. பிரியாணிக்கு வெங்காயம் நிறைய சேர்க்கணும். சுவை நன்றாக இருக்கும்.