Home ஆண்கள் ஆண்களே அலட்சியம் வேண்டாம் உங்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்டது!

ஆண்களே அலட்சியம் வேண்டாம் உங்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்டது!

201

ஆண்மை பெருக்கம்:சில்ரன் ஆஃப் மென் (Children of Men (2006) என்ற திரைப்படத்தை நீங்கள் பார்ததால் நிச்சயம் லேசான பயம் ஏற்படும். காரணம் 2027-ம் ஆண்டில் நடப்பதாக எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் திடீரென்று இனப்பெருக்கம் இல்லாமலாகி குழந்தைகள் பிறப்பது நின்றுவிட்டால் உலகம் என்னவாகும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. தற்போது உலக நாடுகளில் பலவற்றில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துக் கொண்டு வருகிறது என்ற செய்தியை படிக்கும் போது அந்தப் படம் உண்மையாகிவிடுமோ என்று கூடத் தோன்றுகிறது. இது தொடர்ந்தால், மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடலாம் என்று பல ஆய்வறிக்கைகளின் முடிவுகள் எச்சரிக்கின்றன. 

ஒரு மில்லிலிட்டர் விந்தில் 1.5 முதல் 3.9 மில்லியன் அளவிலான விந்தணுக்களின் எண்ணிக்கை இருப்பது இயல்பானது என்கிறது உலக சுகாதார நிறுவனம். தந்தையாக விரும்பும் ஆண்கள் இரவு நேரத்தில் சீக்கிரம் படுக்கைக்குச் சென்றால் அவர்களின் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறது ஆண்களுக்கான பிரத்யேக ஆராய்ச்சி.

மேற்கொண்டு இந்த ஆய்வு தெரிவிப்பது என்னவெனில், ஆண்களுக்கு இரவு 8 மணியிலிருந்து 10 மணிக்குள் விந்தணுக்களின் செயல்பாடு துரிதமாக இருக்கும், அதாவது விந்தணுக்கள் கருமுட்டையுடன் வேகமாக இணைந்து கருவை உருவாக்க ஏதுவான தன்மையில் இருக்கும்.

ஆனால் நள்ளிரவு தாண்டி தூங்கச் செல்லும் ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையில் குறைந்தும், வலுவிழந்தும் போகும் என்கிறது அந்த ஆய்வு. 

ஆறு மணி நேரத்துக்கும் அதற்கு குறைவாகவும் தூங்கும் ஆண்களின் நிலைமையும் விடிந்தும் அதிக நேரம் படுக்கையில் இருப்போர்களின் நிலைமையும் இதைவிட மோசம். அவர்களின் விந்தணுக்கள் விரைவில் இறந்துவிடுமாம்.

 இரவு தாமதமாக படுக்கைக்குச் செல்வது, உடலுக்குத் தேவையான ஓய்வை தர மறுப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடுகள் ஏற்படும். 

காரணம் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பிலிருந்து உருவாகும் ஒருவகை புரதம் விந்தணுக்களுக்கு எதிராக செயல்பட்டு ஆரோக்கியமான விந்தணுக்களை அழித்துவிடும் என்கிறார்கள் சீனாவில் உள்ள ஹார்பின் மெடிக்கல் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆய்வறிக்கையை டெய்லி மெயிலில் வெளியிட்டுள்ளார்கள்.

இதற்கு முந்தைய ஆய்வில், ஆறு மணி நேரம் மட்டும் தூங்கும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை, எட்டு மணி நேரம் நன்றாக தூங்கும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தது என்று கண்டறிந்தனர்.

இந்த ஆய்வின் முடிவில், தினசரி 6 மணி நேரத்திற்கு குறைவாக உறங்குபவர்களின் இனப்பெருக்க திறன் 31 சதவிகிதம் குறைய வாய்ப்பு இருக்கிறது. 

மெடிக்கல் சயின்ஸ் மானிட்டர் என்ற பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. ஆய்வுக் குழுவினர் இதற்காக 981 ஆண்களை தேர்வு செய்தனர். அவர்களில் சிலரை தினமும் 8 மணியிலிருந்து பத்தி மணிக்குள் தூங்கிவிடும்படியும், சிலரை நள்ளிரவில் தூங்கும்படியும், இன்னும் சிலரை நள்ளிரவுக்குப் பிறகு தூங்கும்படியும் அறிவுறுத்தினார்கள். அவர்களின் அலாரத்தை ஏழிலிருந்து எட்டு மணி நேரத்துக்கும், சிலரை ஆறு மணி நேரத்துக்கும் இன்னும் சிலரை ஒன்பது மணி நேரம் கழித்தும் அடிக்கும்படியாக வைக்கச் சொன்னார்கள். ஒரு ஆணின் விந்துவில் 5 முதல் 15 கோடி வரை விந்தணுக்கள் இருந்தால் மட்டுமே அவை வெளிப்பட்ட உடனே பெண்ணின் கருப்பையை நோக்கி நீந்த ஆரம்பிக்கின்றன. பல நேரங்களில் ஒற்றை விந்தணு மட்டுமே பெண்ணின் கருப்பையை சென்றடையும். குறைவான தூக்கமும் சரியான உணவு பழக்கமும் இல்லாதவர்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைந்துவருகிறது. எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதற்கும், கருவூட்டும், கருத்தரிக்கும் திறனுக்கும் தொடர்பு இருக்கிறது. ஆணோ, பெண்ணோ தினசரி ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்கவில்லை என்றால், அது இனப்பெருக்கத்தை நேரிடையாக பாதிக்கும். குறிப்பிட்ட சில நாள்கள் கழித்து அவர்களின் விந்து எண்ணிக்கை, வடிவம் மற்றும் இயக்கம் ஆகியவற்றை ஆராய்ந்த பிறகுதான் மேற்சொன்ன ஆய்வு முடிவுக்கு வந்தனர்.

உறக்கத்தைத் தவிர உணவும் இதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கையானது ஒருவர் உட்கொள்ளும் உணவுடனும் தொடர்புடையது. மனித உடலின் அத்தனை செயல்பாடுகளுக்கும் அடிப்படைத் தேவை உணவுதான். தினமும் ஒருவர் உட்கொள்ளும் உணவில் கொழுப்புச் சத்து அதிகம் இருந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் என்கிறது இன்னொரு ஆய்வு. 

அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் 99 ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளையும், ஜன்க் புட்ஸ் என்று அழைக்கப்படும் குப்பை உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவோர்களின் விந்தணுக்களின் தரம் மோசமாக இருந்தது எனக் கண்டறியப்பட்டது.  மீன் மற்றும் காய்கறி எண்ணெய்களில் ஒமேகா-3 அதிக அளவில் உள்ளது. இந்த ஆய்வின்படி, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை உட்கொள்பவர்களின் விந்தணுக்களின் தரம் 43 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. ஒமேகா-3 அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடுபவர்களின் விந்தணுக்கள் அதிக தரமுள்ளதாக இருக்கிறது.

மேலும் விந்தணு குறைப்பாட்டுக்கு இன்னொரு முக்கிய காரணம் ஒருவரது பழக்க வழக்கங்கள். ஷிப்ட் முறை வேலைகள், மன அழுத்தத்தால் உறக்கமின்மை, பசியின்மை அல்லது நொறுக்குத் தீனியை அதிகம் உண்ணுவது, உடல் உழைப்பு இல்லாதது என பல தவறான வாழ்க்கை முறைகளை கடைப்பிடிப்பவர்கள் உடனடியாக அதனை மாற்றிக் கொள்ளவில்லை எனில் அவர்கள் சந்ததி இல்லாமல் போக அதிக வாய்ப்பு ஏற்படும்.

இந்த பிரச்னையிலிருந்து மீள்வது எப்படி?

மீன் உள்ளிட்ட ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்கள் அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். 
ஜீன்ஸ், டைட் ஷார்ட்ஸ் போன்ற அதிக இறுக்கமான ஆடைகளை அணியக்கூடும். 
பாலியல் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கவும்.
இனப் பெருக்கத்திற்கும் ஆழ்ந்த உறக்கம் அவசியமானது.
குடி போதை பழக்கங்கள் இருந்தால் நிறுத்திவிட வேண்டும்.
கொதிக்கும்படியான சூடு நீரில் குளிக்கவேண்டாம்.
தினமும் வாக்கிங், உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டும்