Home ஆரோக்கியம் அமைதியாக பெண்களைத் தாக்கும் மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சூப்பர் உணவுகள்!

அமைதியாக பெண்களைத் தாக்கும் மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சூப்பர் உணவுகள்!

42

captureதற்போது நிறைய பெண்களை அமைதியாகத் தாக்கும் ஓர் கொடிய நோய் தான் புற்றுநோய். உலகில் மில்லியன் கணக்கிலான பெண்கள் மார்பக புற்றுநோயால் அவஸ்தைப்படுகின்றனர். ஆரம்பத்திலேயே மார்பக புற்றுநோயை கண்டறிந்து, சிகிச்சை மேற்கொண்டால் எளிதில் குணப்படுத்திவிடலாம்.

ஆனால் அதுவே முற்றிய நிலையில் அறிந்து, சிகிச்சை எடுத்தால், அதனால் மிகுந்த அவஸ்தைப்படக்கூடும். இந்த மார்பக புற்றுநோய் நமது அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் உணவுகளால் தான் வருகின்றன. இருந்தாலும், ஒருசில உணவுகளை உட்கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம். இங்கு மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சில சூப்பர் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

தற்போது நிறைய பெண்களை அமைதியாகத் தாக்கும் ஓர் கொடிய நோய் தான் புற்றுநோய். உலகில் மில்லியன் கணக்கிலான பெண்கள் மார்பக புற்றுநோயால் அவஸ்தைப்படுகின்றனர். ஆரம்பத்திலேயே மார்பக புற்றுநோயை கண்டறிந்து, சிகிச்சை மேற்கொண்டால் எளிதில் குணப்படுத்திவிடலாம்.

ஆனால் அதுவே முற்றிய நிலையில் அறிந்து, சிகிச்சை எடுத்தால், அதனால் மிகுந்த அவஸ்தைப்படக்கூடும். இந்த மார்பக புற்றுநோய் நமது அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் உணவுகளால் தான் வருகின்றன. இருந்தாலும், ஒருசில உணவுகளை உட்கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம். இங்கு மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சில சூப்பர் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் காளான் கடந்த சில வருடங்களுக்கு முன் மேற்கொண்ட ஆய்வுகளில் காளான் மார்பக புற்றுநோயைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது. காளானில் உள்ள உட்பொருட்கள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, அது பரவுவதைத் தடுக்கும்.

ப்ராக்கோலி ப்ராக்கோலியும் மார்பக புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும். எனவே பெண்கள் வாரத்திற்கு 2-3 முறை ப்ராக்கோலியை உணவில் சேர்த்து வர, மார்பக புற்றுநோயைத் தடுக்கலாம்.

மஞ்சள் மஞ்சளில் உள்ள குர்குமின், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும், அது பரவுவதையும் தடுக்கும். எனவே தினமும் ஒரு டம்ளர் பாலை சூடேற்றி, அதில் மஞ்சள் தூள் மற்றும் தேன் கலந்து குடித்து வர, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பூண்டு பூண்டு பல்வேறு நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. அதில் மார்பக புற்றுநோயைத் தடுப்பதும் ஒன்று. எனவே புற்றுநோய் தாக்காமல் இருக்க அன்றாட உணவில் பூண்டு சேர்த்து வாருங்கள்.

பசலைக்கீரை பசலைக்கீரையில் உள்ள சக்தி வாய்ந்த உட்பொருட்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, மார்பக புற்றுநோய் வருவதைத் தடுக்கும். எனவே இந்த கீரை கிடைக்கும் போது தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

சால்மன் சால்மன் மீன் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். ஏனெனில் அதில் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளது. எனவே முடிந்தால் வாரம் ஒருமுறை சால்மன் மீனை சமைத்து சாப்பிடுங்கள்.

ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயிலில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இவை புற்றுநோய் செல்களை அழிக்கும் முக்கிய செயலை செயல்கிறது. எனவே உயிரைப் பறிக்கும் கொடி மார்பக புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்க ஆலிவ் ஆயிலை அன்றாட சமையலில் சேர்த்து வாருங்கள்.