Home குழந்தை நலம் சாதாரண குழந்தை பிறப்பின்போது குழந்தை பிறப்பு

சாதாரண குழந்தை பிறப்பின்போது குழந்தை பிறப்பு

26

சாதாரண குழந்தை பிறப்பின்போது, பெண்களுக்கு ஆரம்ப நிலையில் மெதுவாகவும், அதிகரித்த இடைவெளியிலும் வயிற்றில் வலியெடுக்க ஆரம்பிக்கும். நேரம் செல்லச் செல்ல வலியின் அளவு அதிகரிப்பதுடன், வலிகளுக்கிடையிலான இடைவெளியும் குறைந்து செல்லும். இந்த வலியின் தன்மை ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் வேறுபடும். இந்தத் தன்மை குறிப்பாக பிரசவம்பற்றிய பயம், மற்றும் ஆர்வத்தில் தங்கியிருக்கும். ஏற்கனவே குழந்தை பெற்றிக் கொண்ட அனுபவம், வயது, அவர்களின் சமூக அமைப்பு, அவர்கள் செய்யும் தொழில், இயற்பியல் சூழல், தயார்ப்படுத்தல் போன்ற பல்வேறு காரணிகளும், இந்த வலியின் தன்மையை மாற்ற வல்லன.

குழந்தை பிறப்பின்போது சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்வதன்மூலம் வலியின் தன்மையைக் குறைக்க முடியும் என நம்பப்படுகிறது. மூக்கினால் மூச்சை எடுத்து, வேயினால் வெளியேற்றும் பயிற்சியானது வலியைக் குறைக்க மிகவும் பயன்படுகிறது. குழந்தை பிறப்பின்போது, எவ்வாறு ஒரு பெண் இருப்பது என்பதும் பெண்ணுக்கு பெண் வேறுபடும். சிலர் படுத்திருக்கையில் வலி குறைவாக இருப்பதாகவும், சிலர் எழுந்து நிற்கையில் குறைவதாகவும், வேறு சிலர் நீரினுள் அமர்ந்திருக்கையில் வலி குறைவதாகவும் உணர்கின்றனர்.

உளவியல் தொடர்பான அறிகுறிகள்
பெண்களில் குழந்தை பிறப்பானது மிகவும் தீவிரமான நேர்மறையானதும், எதிர் மறையானதுமான உணர்வுகளை வெளிப்படையாக காட்டக் கூடிய நிலமையை ஏற்படுத்த வல்லது. பல பெண்கள் குழந்தை பிறந்ததும் மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் உணரக்கூடிய அதே வேளையில், சில பெண்களுக்கு குழந்தை பிறப்பிற்குப் பின்னான, மன அழுத்த ஒழுங்கின்மை ஏற்படும் அமெரிக்காவில், 70-80% மான பெண்கள் குழந்தை பிறப்பிற்குப் பின்னர், ஏதொ ஒரு வகை கவலையை உணர்கின்றனர். 10% மான பெண்களுக்கு, மன அழுத்தம் ஏற்படுகின்றது. சிலரில் அசாதாரண, தொடர்ந்திருக்கும் மன அழுத்தம் காணப்படும். இந் நிலையைத் தவிர்க்க குழுவாக அமர்ந்து பெற்றுக் கொள்ளும் சிகிச்சை முறை மிகுந்த பலனளிக்கிறது குழந்தை பிறப்பின்போது, பிறக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பான உள் சூழலை விட்டு வெளியேறுவதும், வேறு பல காரணிகளும் மன அழுத்தத்தை கொடுக்கக்கூடும்.