Home பெண்கள் கருத்தரிப்பு கர்ப்பமாக இருக்கும்போது செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாமா?

கர்ப்பமாக இருக்கும்போது செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாமா?

142

முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான
சந்தேகம்தான் இது. கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும், எது சரி, எது தவறு என்பது குறித்த குழப்பங்களும், பயமும் கர்ப்ப காலத்தின்போது செக்ஸ் உறவிலிருந்து பலரையும் விலக்கிக் கொண்டு சென்று விடுகிறது.

கர்ப்ப காலத்தின்போது பெண்கள் மனதளவிலான மாற்றங்களை சந்திக்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டவர்களாக பெரும்பாலான பெண்கள் அச்சமயத்தில் இருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் போனாலோ அல்லது திருப்திக் குறைவு ஏற்பட்டாலோ அது அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அது கருவில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும்.

கணவரிடமிருந்து போதிய ஒத்துழைப்பு, ஆதரவு கிடைக்காமல் போனால் அவர்களுக்குள் பெரும் ஏமாற்றம், எரிச்சல், பசியின்மை உள்ளிட்டவை ஏற்படும். இந்த எதிர்பார்ப்புகள் செக்ஸ் உறவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை அல்ல.

இந்த மாற்றங்களை, பாதிப்புகளை பெரும்பாலான ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. அல்லது நிவர்த்தி செய்ய முயலுவதில்லை. அதற்குப் பதிலாக சிம்பிளாக டாக்டரிடம் கூட்டிக் கொண்டு காட்டுவதையே விரும்புகிறார்கள்.

கர்ப்ப காலத்தின்போது தங்களது மனைவியரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும். செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பினால் முறையான, இருவருக்கும் மனம் ஒத்த நேரத்தில் அதைச் செய்ய முயல வேண்டும். மாறாக மனைவியை அதற்காக வற்புறுத்துவது கூடாது.