Home ஆரோக்கியம் நீங்கள் குளிக்கும்போது நீங்கள் செய்யும் தவர்கள்

நீங்கள் குளிக்கும்போது நீங்கள் செய்யும் தவர்கள்

316

தினந்தோறும் நாம் செய்யும் கடமைகளில் மிகவும் முக்கியமானது குளித்தல். குளிப்பதனால் மனம் மற்றும் உடல் புத்துணர்ச்சி மற்றும் ஆறுதல் பெறுகின்றது. ஆனால் நீங்கள் கவனக் குறைவால் குளிக்கும் போது நீங்கள் சில தவறுகளை செய்கிறீர்களா?

இந்த சிறு தவறுகளால் சில நேரங்களில் ஆரோக்கியத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதனை நீங்கள் அறிந்து கொண்டு மீண்டும் அந்த தவறுகளை செய்யாமல் இருப்பது அவசியமானது.

குளிக்கும் போது செய்யும் சில தவறுகள்.

1. நீண்ட நேரம் சவரின் கீழ் நிற்றல்.
நீண்ட நேரம் சவரின் கீழ் நின்று குளிப்பது பலருக்கும் பிடிக்கும். ஆனால் இதனால் ஆரோக்கியத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுவதனால் அவற்றைத் தவிர்ப்பது சிறந்தது.

2. சூடான நீரில் குளித்தல்.
சூடான நீரில் குளிப்பதனால் சருமத்தில் இயற்கையாக உள்ள எண்ணெய்த் தன்மை வெளியேறி விடுகிறது. அதனால் சருமம் உலர்வடைந்து, கடிகள் ஏற்படும் . எனவே குளிர்ந்த நீரில் குளிப்பது சிறந்தது.

3. அதிகமான சோப்பை பயன்படுத்தல்.
சோப்பை பயன்படுத்துவதனால் அதிக நறுமணத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம். ஆனால் இரசாயணப் பொருட்கள் நிறைந்த சோப்பை அதிகம் பயன்படுத்துவதனால் சருமத்தின் pH பேணமுடியாது. எனவே இயற்கையாக தயாரிக்கப்பட்ட சோப்பை குறைந்தளவில் பயன்படுத்துவது சிறந்தது.

4. துவாய் மற்றும் உடல்கழுவும் நெற்றினை கழுவாமை:
குளித்தால் உடல் சுகாதாரமாக இருக்கும் என எண்ணி விடாதீர்கள். குளிக்கும் போது பயனப்டுத்தும் உடல் கழுவும் நெற், மற்றும் துவாயினை சுத்தமாக கழுவி பயன்படுத்துவது அவசியமானது.

5. தினமும் முடியைக் கழுவுதல்.
தினமும் முடியைக் கழுவுவதனால் தலை சுத்தமாக இருக்கும் என தவறாக எண்ணி விடாதீர்கள். தினமும் குளிப்பதனால் அதிக எண்ணெய்த் தன்மை அடைகின்றது. இதனால் வாரத்திற்கு மூன்று தடவைகள் முடியைக் கழுவுவது போதுமானது.

6. துவாயினால் தேய்த்து துடைத்தல்.
குளித்த பின்பு துவாயினால் தேய்த்து துடைப்பதனால் சருமம் மேலும் உலர்வடைகிறது. ஏனெனில் துவாயும் உலர்ந்து இருப்பதனால் சருமத்தில் உள்ள அதிகளவான நீரை வெளியேற்றும்.

7. தினமும் இறந்த கலங்களை நீக்குதல்.
இறந்த கலங்களை நீக்குவதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து சருமத்தின் பொலிவை மேம்படுத்தும். ஆனால் தினமும் இதனை செய்வதனால் சருமம் அதிக எண்ணெய்த் தன்மை அதிகரித்து பக்டீரியாக்களை வளரச் செய்கின்றது. எனவே வாரத்திற்கு 2 அல்லது 3 தடவைகள் இறந்த கலங்களை நீக்குவது போதுமானது.

8. குளித்த பின்பு மொய்ஸ்டரைசர் பயன்படுத்தாமை.
இரவு நேரத்தில் மொய்ஸ்டரைசர் பயன்படுத்துவதை விட குளித்த பின்பு பயன்படுத்துவதனால் சருமத்தின் ஈரப்பதத்தைப் பேணலாம்.