Home ஜல்சா விஷத்தை விட கொடியதா? … ”அந்த’’ விஷயம்??

விஷத்தை விட கொடியதா? … ”அந்த’’ விஷயம்??

38

hot-anaika-soti-satya-2-wallpaperஆபாச தன்மை கொண்டவைகள் விஷத்தை விட கொடியது என நிருபிக்கும் காரணிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். ஆபாசம் நல்லதா ? கெட்டதா ? எனபதை விட மனித மனதில் ஏற்படுத்தும் அழுத்தங்களின் வாயிலாக வாழ்வை பாழ்படுத்தும்.பாலுணர்வு சார்ந்த விடயங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது வாழ்க்கையின் பல தவறுகளை கட்டுப்படுத்தும் நம் குடும்ப உறவுகளை வளப்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.!

ஆபாசம் கெட்டது!!! காரணங்கள்.?

நம்முடைய இந்திய கலாசாரத்தில் குடும்பம் , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போன்ற உறவுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையில் குடும்பம் சார்ந்த உண்மையான பந்தத்தை கொண்டுள்ளது. ஆனால் ஆபாச படங்களுக்கு அடிமையானவர்களின் மனதில் தவறான எண்ணங்களுடன் செயற்கையான உலகத்தினை உருவாக்கி கொள்வதனால் குடும்பத்தை விட்டு விலகி நிற்பார்கள்.

உடலைச் சார்ந்த விடயங்களில் உறவிருந்தாலும் உணர்வுரீதியாக இல்லாமல் காமம் மட்டுமே குறிக்கோளாக மாறி அந்த எண்ண வேட்கைக்கு தள்ளப்படுவார்கள். இதனால் அவர்களுக்கு முழுமையான தீர்வினை உறவு தராது. எனவே அன்புடன் கூடிய நெருக்கமான உறவு வாழ்வை வளமாக்கும்.

தவறான ஆபாச படங்களை அதிகம் பார்பதனால் அதை நிஜமாக கருதி நம் வாழ்வில் பல தவறான எண்ணங்கள் , தாழ்வு மனப்பான்மை மற்றும் தனிமை போன்றவை அதிகம் ஏற்படும் என்பதனால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பருகளுடன் உள்ள நெருக்கமான பந்தம் பாதிக்கும். இது தொடருமானல் வாழ்வின் பெரும்பகுதியை இழப்பீர்கள்.

ஆபாசம் போதையா ?

ஆபாசம் போதையல்ல என சமீபத்தில் வெளியான ஆய்வில் நிருபிக்கப்பட்டாலும் ஆபாச படங்களை பார்த்து பழகியவர்கள் அதனை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பது உண்மைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அது போதையா இல்லையா என்பதனை தாண்டி ஆபாசம் ஆபத்துதான் என்பது உண்மையே.. எனவே தவிர்ப்பது நல்லது. உடல் சார்ந்த உறவு என்பது கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிறிய அளவிலான பிரிவுகளுக்கான உறவு பாலமாகவும் ,சந்ததியை வளர்க்கும் ஓர் உறவு பாலம் என்பதனை கடந்த அதன் தன்மைகளை மறந்து தவறான ஆபாசம் வாயிலாக நேர்வது குடும்ப பிரிவே ஆகும். சிறிய அளவில் தொடங்கிய ஆபாசம் சார்ந்த விடயங்களால் மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கும் ஆபாசம் நாளடைவில் நம்முடைய மனதினை மழுங்கிய கத்தி போல ஆக்கிவிடும் என்பதனால் வாழ்வியலில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும்