Home குழந்தை நலம் குழந்தைகளின் தூக்கம் கலைந்தால் உடல் பருமனாகும்

குழந்தைகளின் தூக்கம் கலைந்தால் உடல் பருமனாகும்

61

குழந்தை நலம்:குழந்தைகள் குறைந்த நேரம் மட்டுமே தூங்குகிறார்கள் என்றால் அதை பெற்றோர் சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. அதுவே அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது எடை அதிகரித்து உடல் பருமனாகும் நிலை ஏற்படும்.

குழந்தைகள் குறைந்த நேரம் மட்டுமே தூங்குகிறார்கள் என்றால் அதை பெற்றோர் சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. அதுவே அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது எடை அதிகரித்து உடல் பருமனாகும் நிலை ஏற்படும்.

அதனால் இருதய நோய்கள், இரண்டாம் ரக நீரிழிவு நோய் போன்றவை ஏற்படும். தற்போதைய சூழ்நிலையில் இவை பெரும்பாலான குழந்தைகளையும் பாதித்துள்ளது. எனவே குழந்தைகளுக்கு தூக்கம் அவசியம். இத்தகவலை இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். பச்சிளங் குழந்தைகள், வளரும் குழந்தைகள் என 0 முதல் 18 வயது வரையிலான 75,499 பேரிடம் இது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகள், ரெகுலராக வழக்கம்போல் தூங்கும் குழந்தைகள் என இரு பிரிவுகளாக பிரித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

அதில், 4 முதல் 11 மாத வயதுள்ள பச்சிளங்குழந்தைகள் இரவு நேரத்தில் 12 முதல் 15 மணிநேரம் தூங்க வேண்டும். 1 முதல் 2 வயதுள்ள குழந்தைகள் தினமும் 11 முதல் 14 மணிநேரமும், 3 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் தினசரி 10 முதல் 13 மணிநேரமும், 6 முதல் 13 வயது வரையிலான பள்ளி குழந்தைகள் தினசரி 9 முதல் 11 மணிவரையிலும் நன்றாக தூங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 14 முதல் 17 வயது வரையிலான டீன் ஏஜ் பருவத்தினர் தினமும் 8 முதல் 10 மணிநேரம் தூங்க வேண்டும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.