Home ஆரோக்கியம் பாத்ரூமில் மொபைல்போன் பயன்பாட்டால் காத்திருக்கும் விளைவுகள்

பாத்ரூமில் மொபைல்போன் பயன்பாட்டால் காத்திருக்கும் விளைவுகள்

19

Captureபாத்ரூமில் மொபைல்போன்களை பயன்படுத்துவதால் உங்களுக்கு சில ‘கண்டங்கள்’ காத்ருக்கின்றன. அவைகளைப் பற்றிய தொகுப்பே இது..!!

முக்கியமான போன் கால், வாட்ஸ்ஆப் மெசேஜ், இமெயில், பேஸ்புக் நோட்டிபிக்கேஷன் என எதுவாக இருப்பினும் சரி பாத்ரூம்களில் மொபைல்போன் பயன்படுத்தும் பழக்கத்தை இன்றோடு முடிந்த வரை தவிர்க்கவேண்டும் இல்லையெனில், சில விளைவுகள் உங்களுக்காகவே காத்ருக்கின்றன.

பார்க்க மட்டும் தான் உங்கள் பாத்ரூம் மிகவும் சுத்தமாக இருக்கும், ஆனால் உண்மையில் உங்கள் பாத்ரூமில் கிருமிகள் மிக அதிகம், அதனுள் கொண்டு செல்லபடும் உங்கள் மொபைல்களில் கிருமிகள் மிக எளிதில் தொற்றிக் கொள்ளலாம்..!

இதன் மூலம் வயிற்றுப்போக்கு தொடங்கி சிறுநீர் பாதை நோய் தொற்று வரையிலாக பல உடல்நல கோளாறுகளை நீங்கள் சந்திக்க நேரிடும் !!

அது மட்டுமின்றி எசரிக்கியா கோலை (Escherichia coli) மற்றும் காய்ச்சல் வைரஸ்கள் (Flu Viruses) பரவும் ஆபத்துகளும் உண்டு, எசரிக்கியா கோலை என்பது சிறுகுடலில் காணப்படும் ஒரு கிராம் நெகட்டிவ் கோல-வடிவமுள்ள பாக்டீரியமாகும்.

‘சரி.. வேறு வழியே இன்றி பாத்ரூமில் மொபைல் பயன்படுத்திட்டேன்..! இப்போ என்ன பண்ணனும்..?’ என்று கேட்டால், பாத்ரூம் பயன்பாட்டிற்கு பின்பு உங்கள் கைகளை நன்கு கழுவிய பின்பு, ஒரு உலர்ந்த துணியை வைத்து உங்கள் மொபைலை நன்றாக துடைத்து சுத்தம் செய்திடுங்கள்..!!