Home சூடான செய்திகள் 10 விநாடிகள் முத்தமிடும் தம்பதியருக்கு இடையே 8 கோடி பாக்டீரியாக்கள் பரிமாற்றம்

10 விநாடிகள் முத்தமிடும் தம்பதியருக்கு இடையே 8 கோடி பாக்டீரியாக்கள் பரிமாற்றம்

26

உதட்டில் தொடர்ந்து 10 விநாடிகள் முத்தமிடும் தம்பதியருக்கு இடையே 8 கோடி பாக்டீரியாக்கள் பரிமாறப்படுவதாக ‘மைக்ரோபயாம்’ அறிவியல் இதழ் ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதனின் வாயிலும், உமிழ் நீரிலும் 700 வகையான பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இந்நிலையில், உதட்டில் முத்தமிடும்போது, இந்த பாக்டீரியாக்கள் பிறருக்கு பரவ வாய்ப்புகள் மிகவும் அதிகம். எந்த அளவுக்கு இந்த பாக்டீரியாக்கள் முத்தத்தின் மூலம் பரவுகின்றன என்பதை அறிய நெதர்லாந்தின் டிஎன்ஓ அறிவியல் ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சிக்கென்று 21 தம்பதிகளை தேர்ந்தெடுத்து, நாளொன்றுக்கு அவர்கள் எத்தனை முறை முத்தத்தை பரிமாறிக் கொள்கின்றனர்.

எவ்வளவு நேரம் முத்தமிடுகின்றனர் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. பின்னர், அவர்கள் முத்தமிடுவதற்கு முன்பும், 10 நொடிகள் முத்தமிட்ட பின்பும் நாக்கிலும், உமிழ்நீரிலும் இருக்கும் பாக்டீரியாக்களின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தனர். இதில், ஒருவரின் வாயிலிருந்து மற்றவர்களுக்கு 8 கோடி பாக்டீரியாக்கள் செல்வதாக தெரியவந்துள்ளது.