Home சூடான செய்திகள் உங்களுக்கு தெரியாத 8 விஷயங்கள். இதை நீங்க வேறெங்கும் கற்க இயலாது…!

உங்களுக்கு தெரியாத 8 விஷயங்கள். இதை நீங்க வேறெங்கும் கற்க இயலாது…!

40

உடலுறவு என்பது வெறுமென கூடுதல் அல்ல. அப்படி வெறுமென கூடுதல் உங்களுக்கு உடல் ரீதியான, மன ரீதியான எதிர்வினைத் தாக்கத்தை தான் உண்டாக்கும். செக்ஸ் என்பது வெறும் இச்சை உறவல்ல.

அது இன்னொரு உயிரை துளிர்விட செய்யும் இயக்கம். ஒரு பெண்ணை முழுமையடைய செய்யும், மகிழ்வுற செய்யும் உறவும் கூட.

திருமணமான புதிதில், குழந்தைகள் பெற்ற பிறகு தம்பதிகள் கருத்தடை பயன்படுத்த ஆரம்பிப்பது உண்டு. கருத்தடை என்றாலே நாம் அறிந்தது ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகள் மட்டுமே.

ஆனால், இவற்றை தவிர வேறு பல விஷயங்கள் இருக்கின்றன. கருத்தடை மட்டுமல்ல, சாதராணமாக நீங்கள் உடலுறவில் ஈடுபடும் போது, கருத்தடை உபகரணங்கள் பயன்படுத்தும் போது உங்களுக்குள் நடக்கும் மாற்றங்களும் சிலவன இருக்கின்றன.

இவற்றை குறித்து பெரும்பாலான தம்பதிகள் அறிந்திருப்பது இல்லை. முக்கியமாக இந்த எட்டு விஷயங்கள்…

டெண்டல் டேம்! டெண்டல் டேம் (Dental Dams), இவை ஓரல் செக்ஸ் (வாய்வழி செக்ஸ்) மூலமாக பால்வினை நோய் தொற்று உண்டாவதை தடுக்கும்.

டெண்டல் டேம்ஸ் எனப்படுவது செவ்வக வடிவத்தில் ஒரு ரப்பர் திசு போல இருக்கும். இதை ஓரல் செக்ஸில் ஈடுபடும் போது மக்கள் பயன்படுத்துவது உண்டு.

இது பால்வினை தொற்று பரவாமல் / ஏற்படாமல் தடுக்கிறது. டெண்டல் டேம் எனும் இதை ஓரல் செக்ஸில் ஈடுபடும் முன்னர் பெண்குறியில் / ஆசனவாய் பகுதியில் சரியாக பிளேஸ் செய்ய வேண்டும்.

பிளான் பி! கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்ட பிறகு மறுநாள் காலை உடலுறவில் ஈடுபடுவது என்பது கருத்தரிக்காமல் இருக்க உதவும் என்பதே பொதுவாக அனைவரும் நம்பும் விஷயம்.

பி.எம்.ஐ 25க்கு மேல் இருக்கும் பெண்கள் மத்தியில் இது சரியான பலன் அளிப்பதில்லை என்றும், அவர்கள் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு என்றும் ஆய்வறிக்கை கூறுகின்றன.

காப்பர் ஐ.யூ.டி பி.எம்.ஐ 25க்கு மேல் இருக்கும் பெண்கள், இதற்கு மாறாக காப்பர் ஐ.யூ.டி முறை பின்பற்றலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுரைக்கிரார்கள்.

மேலும், நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டிருந்தால், கருத்தரிப்பதை தடுக்க, உடலுறவில் ஈடுபட்ட ஐந்து நாட்களுக்குள் இந்த காப்பர் ஐ.யூ.டி பொறுத்த வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அழற்சி! ஆணுறை என்பது லேட்டக்ஸ் (Latex) எனும் ரப்பர் பொருளால் உருவாக்கப்படுகிறது.

இது அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது.

சிலருக்கு இதை பயன்படுத்தும் போது அழற்சி உண்டாகும். இதற்காகவே ரப்பர் அழற்சி இருக்கும் நபர்களுக்கு பிளாஸ்டிக்கால் உருவாக்கப்படும் ஆணுறைகளும் விற்கப்படுகின்றன.

ரப்பர், பிளாஸ்டிக்! சிலர் விலங்கு தோள்களில் உருவாக்கப்படும் ஆணுறைகள் பயன்படுத்தலாமா? என கேட்பதுண்டு.

ஆனால், இது பால்வினை நோய் தொற்று பரவாமல் இருக்க எந்தளவிற்கு உதவும் என்று கூற இயலாது.

இது பாதுகாப்பானது என்று யாரும் முழு உத்திரவாதமும் அளிப்பதில்லை. எனவே, ரப்பர் அல்லது பிளாஸ்டிக் ஆணுறை பயன்படுத்துவது ஒரு நல்ல தீர்வாக அமையலாம். ஒருவருக்கு ரப்பர் ஆணுறை அழற்சி ஏற்படுத்துகிறது என்பதை அந்த இடத்தில் சிவந்து காணப்படுதல், வீக்கம் அல்லது அரிப்பு, எரிச்சல் உண்டாவதை வைத்து அறிந்துக் கொள்ள முடியும்.

மாத்திரை மட்டுமின்றி… பலரும் ஆணுறை விட்டால், கருத்தடை மாத்திரை தான் கருத்தரிக்காமல் இருக்க உதவும் ஒரே வலி என்று கருதுகிறார்கள்.

ஆனால், கருத்தடை மாத்திரை தவிர, இன்னும் பல வழிகள் இருக்கின்றன. நூவா ரிங் (Nuva Ring), தி பேட்ச் (The Patch) மற்றும் தி பர்த் கண்ட்ரோல் ஷாட் போன்ற முறைகளும் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

நூவா ரிங்! நூவா ரிங் எனப்படுவது பெண்ணுறுப்பில் பொருத்திக் கொள்ள வேண்டியது ஆகும்.

இது குறைந்த அளவில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்டின் (Estrogen and Progestin) வெளிப்படுத்தும்.