Home உறவு-காதல் கணவர்கள் விரும்பும் 9 காதலான தருணங்கள்

கணவர்கள் விரும்பும் 9 காதலான தருணங்கள்

10

ஆண்கள் அதிகமாக காதலிப்பவர்கள், நிகோலஸ் ஸ்பார்க்ஸ் இதை ஒத்துக்கொள்வார். எனவே, ஆண்கள் காதலிக்கப்படுவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.

எங்களுடன் வேலை செய்யும் ஆண் நண்பர்களிடம் அவர்கள் விரும்பும் செயல்கள் பற்றி கேட்டறிந்தோம், அவர்களின் அழகிய பதில்கள் இதோ:

கணவர் 1: கட்டிப்பிடித்தல்
” நான் இங்கே புராணத்தை முறித்துக் கொள்ள விரும்புகிறேன், பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் கட்டியணைப்பதை விரும்புகிறார்கள். சொல்லப்போனால் பெண்களைவிட ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள். ” நான் எவ்வளவுதான் நடித்தாலும் அவளின் அணைப்பு அவள் மேல் உள்ள காதலை வெளிப்படுத்திவிடும், இது மிகவும் அழகான ஒன்று.”

கணவர் 2: வீட்டில் சமைக்கும் உணவு
“ஒரு மனிதனின் இதயத்திற்கு செல்லும் வழி அவரது வயிறுதான்”

” இது அடிக்கடி நடப்பதல்ல, அப்படி நடந்தால் அது சிறப்பான நாளாகும். சில சமயம் நான் அவளுக்காக உணவு சமைப்பேன் ஆனால் அவள் சமைக்கும் உணவுடன் ஒப்பிடும்போது நான் சமைக்கும் உணவு என் கல்லூரி உணவையே ஞாபகப்படுத்தும். அவள் என் மேல் வைத்துள்ள காதல் ஒவ்வொரு வாய் உணவிலும் நன்றாக தெரியும்.”

கணவர் 3: அவள் மடியில் படுத்துக்கொள்ளுதல்
” அவள் மடியில் படுத்திருக்கும்போது அவள் விரல்கள் என் தலைமுடியை வருடுவதை நான் மிகவும் நேசிக்கிறேன். அதுமட்டுமின்றி, உடனடியாக தூங்கிவிடுவேன் எழும்போது தலையணையில் தலை வைத்திருப்பேன், இது நடக்கும்போதெல்லாம் என் முகத்தில் புன்னகை வருவதை தவிர்க்க இயலாது.”

கணவர் 4: இரவில் நடத்தல்
” இரவில் அவளுடன் நடப்பது அற்புதமானது. குளிர்காலமே மிகவும் சிறந்தது அவள் குளிராக உணரும்போது நான் பின்புறமாக இருந்து அவளை அணைத்துக்கொள்வேன். அவள் எப்பொழுதும் இதற்கு மறுத்ததில்லை, எங்களை பொறுத்தவரையில் இந்த நடைப்பயிற்சி எங்கள் காதலை அதிகரிக்கும் நடனமாகும்.”

கணவர் 5: ஆச்சரியங்கள்
” கடந்த வாரம் அவள் எனக்காக யுடியூபை பார்த்து கிரிக்கெட் பேட் வடிவ கேக் செய்திருந்தால். நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் இதுபோன்று பரிசுகள் கொடுத்துக்கொள்வோம். நான் நினைக்கிறேன் தினமும் அவள் வேலைகளுக்கிடையே என்னை ஆச்சரியப்படுத்த யோசிப்பதற்காகவே சில நிமிடங்களை எடுத்துக்கொள்கிறாள் என்று.”

கணவர் 6: குளியல்
” இதை முற்றிலும் நேசிக்கிறேன், நாங்கள் இருவருமே வேலைக்கு சென்றாலும் வாரம் ஒருமுறையாவது இதனை செய்வோம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாங்கள் இருவரும் ஒன்றாக குளிக்கிறோம். அவள் எனக்கு முதுகு தேய்க்கிறாள் , நான் அவள் தலைக்கு ஷாம்பூவால் மசாஜ் செய்கிறேன். இது எங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்கும் என நாங்கள் அறிவோம்.”

கணவர் 7: நடனம்
” அவள் இதை விரும்புகிறாள். ஒவ்வொரு முறையும் பார்ட்டிகளிலோ அல்லது சில சமயம் எங்கள் படுக்கையறையிலோ சில அழகான இசையை போட்டு அவளின் இடுப்பை வளைத்து பிடித்துக்கொண்டு இசைக்கேற்றார் போல நடனம் ஆடுவோம். இதில் நாங்கள் எங்களையே மறந்துவிடுவோம்.”

கணவர் 8: உடல்ரீதியான தொடர்புகள்
” அவள் பொது இடங்களில் என் கையை பிடிப்பதும், என் கன்னத்தை குழந்தை போல் கிள்ளுவதும் அற்புதமான உணர்வுகள், இதைவிட சிறந்த தருணம் எதுவும் இருக்க முடியாது. இது என் காதலை அதிகரிப்பதோடு அவளை மகிழ்ச்சியாய் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்பையும் உணர்த்தும்.”

கணவர் 9: வேலை நேரத்தில் வரும் அவளின் குறுஞ்செய்தி
” வேலை நேரத்தில் என்னை புத்துணர்ச்சியாக்குவது அவளின் குறுஞ்செய்திதான். ஒரு நிமிடமாய் இருந்தாலும் அவள் என்னை பறக்க வைக்கிறாள். நான் என் இருக்கையில் இருக்கிறேன், அவள் நளினமாக முகத்தை வைத்துக்கொண்டு செய்தி அனுப்புகிறாள், இது அதிக காதலை வெளிப்படுத்துவதாக தோன்றலாம் ஆனால் உண்மை அதுதான்.”