Home ஜல்சா ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன் !

ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன் !

45

ஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்தரங்கள் உடல் பாகங்களை மாற்றி அமைத்து கொண்டனர்.

மும்பையில் பெண்ணுறுப்பை அழகாக்கி கொல்வதற்கு எனவே தனி மருத்துவமனை இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இதற்கு எல்லாம் மேல் ஒரு படியாக மார்பகங்களை கவர்சியகா, எடுப்பாக வெளிப்படுத்த ஃபேக் நிப்பிள்ஸ் பயன்படுத்தும் ஃபேஷன் அதிகரித்து வருகிறது.

நிப்பிள் என்பது பெண்களுக்கு தாய் பாலூட்ட உதவும் ஒரு உடல் பாகம். மற்ற எந்த ஒரு உயிரினத்திடமும் இல்லாமல், இதை மனிதர்கள் மட்டுமே ஒரு கவர்ச்சி பொருளாக காண்கின்றனர். இதை எடுப்பாக காட்ட போலி ஃபேஷன் உபகரணம் கண்டுபிடித்து பயன்படுத்தி வருகிறார்கள்.

இன்றைய கவர்ச்சிமிகு ஃபேஷன் உலகம். கவர்ச்சியை பூஸ்ட் செய்ய பல வேலைகள் செய்கிறது. அதில் ஒன்று தான் இந்த ஃபேக் நிப்பிள்ஸ். இது ஒரு ஸ்டிக்கர் அல்லது பட்டன் போல இருக்கும்.

இதை மார்பகம் அல்லது மேலாடையில் நிப்பிள்ஸ் பகுதியில் ஒட்டிக் கொண்டால் அது வெளிதொற்றதில் மார்பகங்களை எடுப்பாக காட்டும். இதை தான் இப்போது ஹாலிவுட் நாயகிகள் முதல் சாமானிய மக்களுள் நடமாடும் ஃபேஷன் பெண்கள் வரை பெரும்பாலானோர் விரும்பி பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த ஃபேக் நிப்பிள்ஸ் பல ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் எளிதாக வாங்கும் வகையில் இருப்பதால், இதை அணிய விரும்பும் பெண்கள் எளிதாக வாங்கி பயன்படுத்த துவங்கிவிடுகிறார்கள்.

ஐரோப்பியா, அமெரிக்கா என ஃபேஷன் மேலோங்கி காணும் நாடுகளிலும் மட்டுமின்றி. இந்த ஃபேக் நிப்பிள்ஸ் பயன்பாடு இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, சென்னை வரை பரவியுள்ளது தான் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்த ஃபேக் நிப்பிள்ஸ் என்பது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என கண்டுபிடிக்கப்பட்டது எனவும். ஆனால், அது ஃபேஷன் துறையில் மிகுதியாக உபயோகப்படுத்தப் படுகிறது என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர்.

இந்த ஃபேக் நிப்பிள்ஸ் ஜி.எம்.ஓ ஃப்ரீ, சருமத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் தராது என தயாரிப்பாளர்கள் கூறினும். இது வெளிப்படையாக கவர்ச்சிப் பொருளாக அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கையும் செய்யப்படுகிறது.

இன்றைய நவநாகரீக, நவீன தொழில்நுட்ப, சமூக தள வாழ்வில் உலகின் எந்த மூலையில் வைரல் ஆகும் விஷயமும் உலகம் முழுக்க ஒரே இரவில் பரவி விடுகிறது. இவற்றுள் பயன் விளைக்கும் செயல்களை காட்டிலும் இது போன்ற தேவையற்றவை அதிகம் பரவுகின்றன என்பது தான் வேதனைக்குரியது.