Home ஆரோக்கியம் பொது மருத்துவம் விஷக்காய்ச்சலால் அவஸ்தையா? இதோ சூப்பர் மருந்து

விஷக்காய்ச்சலால் அவஸ்தையா? இதோ சூப்பர் மருந்து

24

dried_ginger_002-300x300தற்போதைய காலத்தில் அதிக மாசினால் பெரும்பாலன மக்களுக்கு தீராத காய்ச்சல் பிரச்சனை வருவதுண்டு.
இதற்காக மருத்துவமனைக்கு ஓடுவதை விட வீட்டிலே எளிதான முறையில் நாம் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். நம்மை பாதுகாக்கும் ஒரு மருந்து தான் “சுக்கு”
இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது இந்த சுக்கு. இதனை நன்கு சேமித்து வைத்தால், ஒரு வருடம் வரை அவ்வப்போது பயன்படுத்தலாம்.
சுக்கின் மகத்துவங்கள்
சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்ப நிலை வாதம் குணமாகும்.
சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்த வழியே போய்விடும்.
சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
சுக்கு சட்னி
புளி, வெல்லம் இரண்டையும் தனித்தனியாக நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். புளி ஊறியதும் கொட்டை, நார்களை நீக்கி விடவும்.
பிறகு வெல்லத்தைப் பிசைந்து சுத்தம் செய்த புளிக்கரைசலில் கலந்து கொள்ள வேண்டும்.
இதனுடன் வாணலியல் மிளகுப்பொடி, சீரகப்பொடி, சுக்குப்பொடி ஆகியவற்றையும் சேர்த்து மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும்.
இந்த கலவை நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கினால் சுக்கு சட்னி ரெடி.
பயன்கள்
சுக்கு சட்னி உடலை சீரிக வைக்கவும் கொழுப்பை குறைக்கவும் மிகவும் உதவும்.
வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறுவதற்கு ஒரு வாரம் சுக்கு சட்னியை செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
சுக்கு குழம்பு
மிளகு, சீரகம், வெந்தயம், தனியா, எள், நசுக்கிய சுக்கு சேர்த்து சிவக்க வறுத்து ஆறவிட்டு பொடிக்கவும்.
புளியை ஊறவைத்து கரைத்து, அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வாணலியில் கொதிக்கவிடவும்.
பிறகு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
வதக்கியவற்றை புளிக்கரைசலில் சேர்த்து கொதிக்கவிட்டு, நன்கு சுண்டி வந்ததும் அரைத்த பொடி சேர்த்து, ஒரு கொதிவிட்டு இறக்கினால் சுக்கு குழம்பு தயார்.
பயன்கள்
அஜீரணம், வாயுத்தொல்லை, தொண்டைக்கட்டு உள்ளவர்கள் சாப்பிட ஏற்றது சுக்கு குழம்பு.
விஷக்காய்ச்சல், சளி போன்ற வியாதிகளை போக்க சுக்கு குழப்பு ஒரு சிறந்த மருந்து.