Home ஜல்சா விபச்சாரத்தை விடமுடியாமல் தவிக்கும் ஒரு இனம்?

விபச்சாரத்தை விடமுடியாமல் தவிக்கும் ஒரு இனம்?

30

625.0.560.320.500.400.194.800.668.160.90டெல்லியின் புறநகர் பகுதியில் வாழும் ’பெர்னா’ என்ற சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சுதந்திரமாக விபச்சார தொழிலில் ஈடுபடுகின்றனர்.

இது சம்பந்தப்பட்ட பெண்களின் முடிவாக மட்டுமில்லாமல் அவளுடைய கணவன் உட்பட்ட குடும்பத்தினரின் விருப்பமாக இருப்பதுதான் உலகில் எங்கும் பார்க்க முடியாத கொடுமை.

ரண வாழ்க்கை
தாரம்புரா என்ற பகுதியில் வசிக்கும் பெர்னா சமூகத்தை சேர்ந்த ராணி என்ற பெண், பின்னிரவு 2 மணிக்கு யாருக்கும் தெரியாமல் குறிப்பிட்ட இடத்துக்குச் செல்கிறாள். அப்போது, குறிப்பாக போலீஸை தவிர்க்கிறாள்.

அதற்கு காரணம் இலவச விபச்சாரத்தில் ஈடுபடுவார்கள், வைத்திருக்கும் பணத்தையும் மிரட்டி அபகரித்துவிடுவார்கள் என்ற பாதுகாப்பிற்காக.

அங்கு எத்தனை வாடிக்கையாளர்களை சந்தோஷப்படுத்த முடியுமோ சீக்கிரம் செய்கிறாள். பிறகு, 5 வாடிக்கையாளர்களும் தந்த பணத்தை எடுத்துக்கொண்டு, காலை 7 மணிக்கு வீட்டுக்கு வருகிறாள்.

வந்ததும் தனது 6 பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் காலை சிற்றுண்டிகளை செய்து கொடுத்துவிட்டு, தானும் உண்டுவிட்டு சில மணிநேரம் தூங்குகிறாள்.திருமணத்துக்கு முன்பே இந்த தொழிலில் ஈடுபட்ட ராணி, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு கணவனுக்கும் சேர்த்து விபச்சாரியானேன்.

திருமணத்துக்கு முன்பே எல்லாம் தெரிந்திருந்ததால் திருமணத்திலும் சுவாரஸ்யமில்லை. இது எங்கள் சமூகத்தில் சாதாரணம். ஆனாலும், குடும்பத்துக்காக ஈடுபடுவதாக கடைசியில் முடிக்கிறாள்.

ஒரு ராணிக்கு மட்டுமல்ல, பெர்னா சமூகத்தில் பிறந்த அனைத்து வாணிகளுக்கும் அமைந்த வாழ்க்கைமுறை இதுதான்

.ஹோர்பாய் எப்படி விழுந்தாள்?
பெர்னா சமூகத்தில் ஒவ்வொரு பெண்களுக்கும் இளம் பருவத்திலே இந்த தொல்லை வந்துவிடுகிறது. என்று பேச ஆரம்பித்த ஹோர்பாய், ’நான் ஒரு தையல் வேலைக்கு பயிற்சி கற்றேன். ஆனால், என் பெற்றோர் இறந்த பிறகு, என் உறவினர்கள் சேர்ந்து எனக்கு ஒருவரை திருமணம் செய்து வைத்தனர்.

என் கணவரே குடும்பத்துக்கு உதவியாக இருக்கும் என்று இந்த தொழிலில் ஈடுபடுத்தினார். பிறகு, கணவரும் இறந்துவிட்டார்.

எந்த வருமானமும் இல்லாத நிலையில் பெர்னா பெண்களின் உறவு, நட்பு மற்றும் இந்த சூழலும் இதிலிருந்து என்னை மீளமுடியாமல் செய்தது. ஆனாலும், கணவர் புரோக்கராக இல்லாதிருப்பது குற்றவுணர்வு இல்லாத விஷயம்’ என்கிறார்.

ஒருவேளை, என் கணவர் இருந்திருந்தால் என் மகள்களை இந்த தொழிலில் ஈடுபடாமல் தடுத்திருப்பேன். இப்போது, இந்த தொழிலில் சம்பாதித்துதான் என் மகள்களை பள்ளிக்கு அனுப்புகிறேன். அவர்களை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், என்னை நினைத்து அல்ல.

பெரும்பாலான பெண்கள் தங்கள் மகள்களை பள்ளிகளுக்கு அனுப்புவதோடு, தங்கள் தொழிலையும் தொடரக் கூடாது என விரும்புகின்றனர்.

கொல்கத்தா, மும்பைக்கும் பட்டுவாடா
பெர்னா இளம்பெண்கள் சிலர் கொல்கத்தா மும்பை போன்ற நகரங்களுக்கும் புரோக்கர்கள் மூலம் அனுப்பப்படுகின்றனர். 10 வயது அனுபவத்தில் இதன் சீரழிவு ஆழம் தெரியாமல் சிக்கிக்கொள்பவர்கள் பிறகு, ஞானம் வந்தாலும் மீளும் சுதந்திரமில்லை என கூறி அழும்போது, நம் நாட்டின் சகல சட்டதிட்டங்களும் பெண்களுக்கு எதிரானதா?

இவர்கள் கொண்டாடும் பெண்கள் தினம் வெறும் சம்பிரதாயமா? என விரக்தி ஏற்படுத்துகிறது.

சரீரமா? சிற்பமா?
குடும்பத்தினரின் வாழ்க்கைக்காகவும் வளர்ச்சிக்காவும் இந்த தொழிலில் ஈடுபடுவதாக கூறினாலும் தங்கள் வாழ்க்கை சிதைந்து போனதை உணரவும் ஒப்புக்கொள்ளவும் விளங்கியுள்ளனர்.

பெண்களை வைத்தே வாழ்ந்துவிடலாம் என்ற பெர்னா சமூக ஆண்களின் சோம்பேறித்தன ஆர்வமும் இந்த நிலை நீடிக்க காரணம்.

ஒரு பெண்ணின் இளமையை முழுமையான தொழில் மூலதனமாக கருதுகிறது இந்த சமூகம். இந்த கொடுமை ஆரம்ப காலத்தில் இவர்கள் மீது எந்த வகையிலோ திணிக்கப்பட்டிருக்கலாம்.

போகபோக இது பெர்னா சமூகத்தின் நீதி என்று பொதுஅறிவு இல்லாமல் பழக்கிவிட்டிருக்கலாம்.

வாழத்தெரியாமல் இருளில் விழுந்த ஒரு இனத்தின் மீது ஒளி பாய்ச்சுவது சக சமூக கடமை.

பாதிக்கப்படும் மக்களை பலியாடுகளாக பயன்படுத்த நினைப்பது, மனிதாபிமான படலத்தின் மீது விழுகிற ஓட்டையாகும். அது ஓசோன் படல ஓட்டையைவிடவும் பெரும்கேட்டை தருவதாகும்.

ஒரு பெண்ணுக்குள் இருக்கும் சிற்றின் ஊற்றுக்கள், அவளுடைய இனவளர்ச்சிக்கும் இல்லற மகிழ்ச்சிக்கும் போதுமான அளவுடையது.

அதை பிழிந்து பணமாக்க நினைத்து, ரணமாக்கிக்கொள்வது போதாமல் அழிவடைவது. தங்கமலர் என்றால் உயிருமில்லை, தங்கமானால் அங்கு மலருமில்லை.