Home ஜல்சா ராதிகா ஆப்தேவின் அடுத்த அதிரடியாக கவர்ச்சி குளியல்

ராதிகா ஆப்தேவின் அடுத்த அதிரடியாக கவர்ச்சி குளியல்

61
‘கபாலி’ படத்தின் கதாநாயகி ராதிகா ஆப்தேவின் கவர்ச்சி விடியோக்கள், படங்கள் அவ்வப்போது வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அந்த விடியோவில் இருப்பது நான் அல்ல, அது மார்பிங் செய்யப்பட்டது என்றெல்லாம் ராதிகா ஆப்தே மறுப்பு கூறி வந்தார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ‘பார்ச்டு’ என்ற ஹிந்தி படத்தில், நடிகர் அடில் ஹுசைனுடன் இணைந்து நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்திருந்தார் ராதிகா. இந்தக் காட்சி அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே திருட்டுத்தனமாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதைத் தொடர்ந்து அவர் தற்போது நடித்து வரும் ‘பொம்பாய்ரியா’ என்ற ஹிந்திப் படத்தில் இதுபோன்றதொரு காட்சியில் நடித்துள்ளார். இது குறித்து அந்தப் படத்தின் இயக்குநர்  ஈ வார்ட் கூறியதாவது:

ராதிகா ஆப்தே நடித்த ‘மேட்லி’ என்ற படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியானபோதுதான், அவர் நடித்த இந்த காட்சியை படமாக்கினோம்.

அப்போது நடந்த சம்பவங்களால் வருதத்தில் இருந்த ராதிகாவிடம், அது போன்றதொரு காட்சியில் எங்கள் படத்தில் அவர் நடிப்பாரா என்ற சந்தேகம் வந்தது. ஆனால் அவர் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் நடித்தார்.

இந்தப் படத்தில் அவருடைய செல்போனை ஒருவர் திருடிவிடுவார். திருடனைத் தீவிரத்துடன் துரத்துவார் ராதிகா. ஏனென்றால் அதில் அவர் குளிக்கும் விடியோ காட்சி உள்ளது. ஹோலி கொண்டாட்டத்துக்கு பிறகு குளித்தபோது எடுக்கப்பட்ட விடியோ அது.

ராதிகா ஒரு நடிகரின் செய்தித் தொடர்பாளர். தன்னுடைய விடியோ வெளியானால் தன்னுடைய வேலைக்கு சிக்கல் உண்டாகும் என வருத்தப்படுவார். இந்தக் காட்சியில்தான் அவர் தயங்காமல் நடித்து நல்ல ஒத்துழைப்பைக் கொடுத்தார். மற்றபடி வேற எதுவும் சர்ச்சைக்குள்ளான விஷயத்தை பயன்படுத்தி படத்துக்கு விளம்பரம் தேட நாங்கள் முயற்சிக்கவில்லை என்று கூறினார்.