Home ஆரோக்கியம் மூலநோயின் தாக்கமா? இதோ சூப்பர் மருந்து

மூலநோயின் தாக்கமா? இதோ சூப்பர் மருந்து

11

பொதுவாக பல வகையான மரங்கள் மருத்துவ குணத்தை பெற்றுள்ளன.

அதிலும் புங்கை மரத்திற்கு அந்த காலத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

ஏனெனில் புங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல வகைகளில் மருத்துவக் குணம் கொண்டவை.

புங்கை மரத்தின் பட்டை, ஆலம்பட்டை, பழுத்த அத்தி இலை என அனைத்தும் பயன் கொண்டது. குறிப்பாக புங்கை மரத்தின் வேருக்கு அதிக சக்தி உண்டு.

புங்கையின் மகத்துவங்கள்

புங்கை இலைக்கு அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்ணை போக்கும் சக்தி உள்ளது.

புங்கன் மர இலையை இடித்து சாறு பிழிந்து 30 முதல் 60 மில்லி அளவு குடித்து வர வயிற்றுப்புண் மற்றும் அதனால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.

வெட்டுக்காயம், புண் ஆகியவற்றை ஆற்றும் சக்தியும் இந்த இலைக்கு உள்ளது.

புங்கன் இலையை தூளாக்கி விளக்கெண்ணெய் விட்டுக் காய்ச்சி, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து தடவி வர தீக்காயம் விரைவாக ஆறும்.

புங்கன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கத்தின் மீது வைத்து உடலில் உள்ள கட்டியின் வீக்கம் குறையும்.

புங்கை மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர முல நோய் தீரும்.

பற்களுக்கு கருமிகள் ஏதும் வரவிடாமல் பாதுகாப்பாக வைக்க புங்கை மரத்தின் குச்சிகளை பயன்படுத்துங்கள்.

புங்கம் வேர், மிளகு, திப்பிலி, சீந்தில் இலை, மகிழவேர் இவற்றை சம அளவு எடுத்து கற்றாழை சாற்றால் அரைத்து சிறு உருண்டையளவு உட்கொள்ள எலி கடியினால் ஏற்படும் விஷம் முறியும்.