Home சூடான செய்திகள் முதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு

முதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு

22

05029be6-31a1-4c5a-b1ea-25e4a182e772_S_secvpfமுதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த இனிய நாளைப் எவ்வித டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகளை பார்க்கலாம்.. திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன் செக்ஸ் பற்றிய, உடலுறவு பற்றிய புத்தகங்களைப் படியுங்கள். தேவைப்பட்டால் மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு தெளிவாகி கொள்ளலாம்.

முதலிரவு தினத்தன்று மாதவிடாய் வராமலிருக்க மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். முதலிரவிற்கு செல்வதற்கு முன் ஒரு முறை குளித்துவிடுங்கள். அப்படி சூழ்நிலை காரணமாக குளிக்க முடியாவிட்டாலும், மாலையில் போட்ட அலங்காரங்களை அகற்றி விட்டு, மிதமான அலங்காரத்திற்கு மாறுங்கள். உடலை உறுத்தாத, அதிக எடை இல்லாத உடையை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளுங்கள்.

குறைவான நகைகளை அணிந்து கொள்ளலாம். உங்கள் துணைவரின் உணர்ச்சிக்கு உற்சாகமூட்ட காதுகளுக்குப் பின்புறம், மணிக்கட்டு போன்ற இடங்களில் மிதமான வாசனை திரவியங்களை அதே சமயம் நல்ல உணர்வுகளை தூண்ணடக் கூடிய திரவியங்களை தடவிக் கொள்ளுங்கள். படுக்கை விரிப்பை ஒரு முறைக்கு இரு முறை சரி பார்க்கவும். முதல் ஸ்பரிசம் என்பது நிச்சயமாக படபடப்பாகத்தான் இருக்கும்.

உங்கள் கணவரது செயல்கள் உங்களுக்கு ஒருவித தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினால் அதை தயங்காமல் அவரிடம் நாசூக்காக தெரிவியுங்கள். முதலிரவன்றே உறவில் ஈடுபட வேண்டும் என்று அவசியம் இல்லை. அதை இருவரும் உணர்ந்தாலே உங்கள் டென்ஷன் ஓடிவிடும். நீங்கள் இருவரும் முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புகளைப் பற்றிப் பேச இந்த இரவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

தாம்பத்ய உறவில் ஈடுபடும் போது உணர்ச்சி வேகத்தில் உடனடியாக உறவில் ஈடுபடாமல் சிறிது நேரத்தை முன் விளையாட்டுகளில் செலவழியுங்கள். முதல் முறை உறவில் ஈடுபடும் பெண்களுக்கு வலி இருக்கலாம். உங்களுக்குள் உங்கள் முதலிரவு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். உங்களது அனுபவம் அதை மிஞ்சவும் செய்யலாம் அல்லது ஏமாற்றமாகவும் அமையலாம்.