Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பகால சர்க்கரை நோய் ஆபத்தானதா?

கர்ப்பகால சர்க்கரை நோய் ஆபத்தானதா?

23

9c69ed11-58c1-471f-ac4d-882bc467b329_S_secvpfசில பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய சர்க்கரை நோய் இது. சில கர்ப்பிணிகளுக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதை ஈடுகட்டும் வகையில், அவர்கள் கணையத்தால் இன்சுலினைச் சுரக்க முடியாமல் இருக்கும். இதை ‘கர்ப்பகால சர்க்கரை நோய்’ (Gestational diabetes) என்கிறோம்.

பெரும்பாலான கர்ப்பகால சர்க்கரை நோயை ஆரோக்கியமான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்தலாம். வெறும் 10 முதல் 20 சதவிகிதத்தினருக்கே ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மாத்திரை மருந்து தேவைப்படுகிறது. பிரசவத்துக்குப் பிறகு இந்தச் சர்க்கரை நோய் மறைந்துவிடும்.

கர்ப்பகால சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறியாவிட்டால், பிரசவ நேரத்தில் பிரச்னையை ஏற்படுத்தலாம். வழக்கமாக இருக்க வேண்டியதைவிட, அந்த சிசுவின் எடையும் அதிகமாக இருக்கலாம்.