Home ஆரோக்கியம் மாதவிலக்கின்போது எவ்வளவு நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்ற வேண்டும்?…

மாதவிலக்கின்போது எவ்வளவு நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்ற வேண்டும்?…

20

மாதவிலக்கின் போது, நாப்கினை அது ஈரமாக இருந்தாலும், இல்லையென்றாலும் தினமும் மாற்ற வேண்டுமா? ஏன்?

சில பெண்கள் நாப்கின் மாற்றுவது ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி மாற்றிவிடுவார்கள். அதனால் நோய்த்தொற்று மட்டுமல்லாது, தொடைப்பகுதிகளில் உண்டாகும் உரசலும் தவிர்க்கப்படும்.

சிலர் காலையில் வைப்பதை இரவு மாற்றுவார்கள். சிலரோ ஒரு நாளைக்கு ஒன்று தான் என்றோ அல்லது உதிரப்போக்கு குறைவாக உள்ளது என்பதாலோ அடுத்த நாள் காலையில் குளிக்கும்போது தான் மாற்றுவார்கள்.

இந்த இரண்டு பழக்கமுமே தவறானது தான்.

மாதவிலக்குக் காலத்தில் கர்ப்ப்பபையின் ரத்தக்குழாய்களின் வாய் திறந்திருக்கக்கூடும்.

அதன்மூலம் கிருமிகள் உடலினுள் நுழைந்து தாக்கிவிடக்கூடும் என்பதால் சுத்தமாக இருப்பது ரொம்பவே முக்கியம்.

அதனால் நாப்கின்களை தினமும் மாற்றிவிடுவது நல்லது. ஈரமானாலும் ஆகாவிட்டாலும் ஒரு நாப்கினின் விலையைவிட உங்கள் ஆரோக்கியம் முக்கியமல்லவா?