Home ஜல்சா பெண் பொலிஸின் உள்ளாடைகளை திருடிய அதிகாரியால் சர்ச்சை..!

பெண் பொலிஸின் உள்ளாடைகளை திருடிய அதிகாரியால் சர்ச்சை..!

19

555410684policeஜேர்மனியில் பெண் பொலிஸ் ஒருவரின் உள்ளாடைகளை தொடர்ந்து திருடி வந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை அந்நாட்டு காவல்துறை அதிரடியாக பணியிலிருந்து நீக்கியுள்ளது. மேற்கு Rhine-Westphalia மாகாணத்திலுள்ள Gelsenkirchen என்ற நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 22 வயதான பெண் பொலிஸ் ஒருவர் தனியாக வசித்து வருகிறார்.

இவருக்கு 29 வயதுடைய மற்றொரு பொலிசாரிடம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஆனால், இவர்களது காதல் சில மாதங்களுக்கு முன்னர் முறிந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பெண் பொலிஸ் அறையில் வைக்கப்பட்ட அவரது உள்ளாடைகள் தொடர்ந்து திருட்டு போயுள்ளது அவருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சில தினங்களுக்கு முன்னர் வேலை நிமித்தமாக அவர் வெளியே சென்றிருந்தபோது, அவரது பக்கத்து வீட்டு பெண் அவரை கைப்பேசியில் தொடர்புக் கொண்டுள்ளார். அப்போது, உங்களது வீட்டிற்குள் பொலிஸ் அதிகாரியான உங்கள் முன்னாள் காதல் வந்து சென்றார். என் வீட்டு கதவு துளைவழியாக பார்த்தேன் எனக் கூறியுள்ளார்.

உடனடியாக பெண் பொலிஸ் வீட்டிற்கு திரும்பிய போது, அங்கிருந்த அவரது உள்ளாடைகள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவர் இதனை உடனடியாக தனது உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார். புகாரை பெற்ற பொலிசார் முன்னாள் காதலனின் வீட்டில் சோதனை செய்தபோது ஒருபெட்டி முழுவதும் சுமார் 15க்கும் மேற்பட்ட உள்ளாடைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இவை அனைத்தும் பெண் பொலிஸ் அதிகாரியின் உடைகள் என உறுதி செய்யப்பட்டதும், அவரை அதிரடியாக பணியிலிருந்து நீக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். காவல் துறையின் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த புதன்கிழமை அன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, உள்ளாடைகள் திருட்டு போனதாக கூறப்பட்ட நேரத்தில் நான் எனது தாயார் மற்றும் நண்பருடன் வெளியில் சென்றிருந்தேன். எனக்கும் இந்த குற்றத்திற்கும் தொடர்பு இல்லை என வாதாடியுள்ளார். நபரின் தாயாரும் இதனை உறுதி செய்துள்ளார். ஆனால், நீதிபதிகள் இருவரின் வாக்கு மூலத்தையும் ஏற்கவில்லை. இருவரும் பொய் கூறுகிறார்கள் என நீதிபதிகள் உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் முன்னாள் காதலன் பெண் பொலிஸின் வீட்டிற்கு வந்து சென்றதை பக்கத்துவீட்டு பெண் தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்து வைத்துள்ளது தாய் மற்றும் மகனின் பொய் வாதத்தை முறியடித்துள்ளது. தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பான தீர்ப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.