Home சூடான செய்திகள் புவிவெப்பமயமாதல் பிரசாரத்தில் நாயகன் தனுஷ்

புவிவெப்பமயமாதல் பிரசாரத்தில் நாயகன் தனுஷ்

20

புவிவெப்பமயமாதல் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு விதங்களில் பிரசாரங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, உலக இயற்கை நிதியத்தின் (World wild Fund)சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று பூமி நேரம் (Earth hour) என்ற நிகழ்ச்சி அனுசரிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் 1 மணி நேரம் மின்விளக்குகளை அணைத்து வைக்க வேண்டும். இதன் மூலம் புவி வெப்பமயமாதல் விழிப்புணர்வு மக்களுக்கு உணர்த்தப்படுகிறது.

இந்நிலையில் வருகிற சனிக்கிழமை(31.03.2012) பூமி நேரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 8.30 முதல் 9.30 வரை ஒரு மணி நேரத்திற்கு மின் விளக்குகள் அனைத்தும் அணைத்து வையுங்கள் என்று வேண்டுகொள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பூமிநேரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டிற்கான பூமிநேரம் வரும் 31.03.2012 அன்று இரவு 8.30 முதல் 9.30 வரை ஒரு மணி நேரத்திற்கு கடைபிடிக்கப்பட இருக்கிறது. சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய 6 பெரிய நகரங்கள் இந்திய அளவில் கலந்து கொள்கின்றன.

இதில் எந்த நகரத்தில் அதிகளவு மக்கள் கலந்து கொள்கிறார்களோ அந்த நகரத்திற்கு ‘பூமி நேரத்தின் சாம்பியன் நகரம்’ (earth hour champion) என பட்டம் வழங்கப்படும். அந்த பட்டத்தை சென்னை வெல்ல வேண்டும். அதற்கு சென்னைவாசிகள் ஆதரவு தரவேண்டும் என்றார்.