Home சூடான செய்திகள் மூன்று நடிகைகளுடன் மோதிய சந்தியா

மூன்று நடிகைகளுடன் மோதிய சந்தியா

16

மலையாளத்தில் மூன்று நடிகைகளுடன் மோதி, போட்டி போட்டு ‘காதல்’ சந்தியா நடித்திருப்பதாக திரையுலகில் தகவல் வெளியாகியுள்ளது.
கொலிவுட்டில் சில காலம் நடித்துவிட்டு தற்போது மலையாளத்தில் ‘காதல்’ சந்தியா நடித்து வருகிறார்.

நாயகன் பிருத்வி ராஜுடன் சந்தியா இணைந்து ‘மாஸ்டர்ஸ்’ படத்தில் நடித்துள்ளார்.

இதுகுறித்து நாயகி சந்தியா கூறியதாவது, அடுத்தடுத்த திருப்பங்களை கொண்ட இந்த திகில் படத்தில் நான் கல்லூரி மாணவியாக நடித்துள்ளேன்.

இப்படத்தில் என்னுடன் பியா, அனன்யா, மித்ரா குரியன் மூன்று பேர் நடித்துள்ளார்கள்.

நாங்கள் மாஸ்டர்ஸ் படத்தில் போட்டி போட்டு நடித்துள்ளோம். நடிப்பு திறமையை வெளிப்படுத்த எங்களுக்கு சரிசமமான வாய்ப்பை இயக்குனர் கொடுத்துள்ளார்.

எனக்கு பொருத்தமான கதாப்பாத்திரங்களில் மலையாள, கன்னட படங்களில் நான் நடிக்கிறேன். ஒருவேளை பிடித்தமான கதாப்பாத்திரத்தில் நடிக்க அழைப்பு வந்தால் தமிழில் நடிக்க தயங்கமாட்டேன் என்று சந்தியா கூறியுள்ளார்.