Home ஜல்சா புகார் கொடுக்க வந்த பெண்ணை ‘மசாஜ்’ செய்ய சொன்ன சப்-இன்ஸ்பெக்டர்

புகார் கொடுக்க வந்த பெண்ணை ‘மசாஜ்’ செய்ய சொன்ன சப்-இன்ஸ்பெக்டர்

23

Captureஉத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தாய் மாவட்டத்தில் கொத்வாலி என்ற இடத் தில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு ஒரு பெண் புகார் கொடுக்க சென்றார். அந்த பெண் மூலிகை தைலங்கள் விற்பனை செய்பவர்.

அப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணிடம் மூலிகை தைலங்கள் பற்றி விசாரித்தார். பின்னர் தனக்கும், மூலிகை தைலங்களை வைத்து மசாஜ் செய்து விடுமாறு கூறினார். இதை மறுக்க முடியாத பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு போலீஸ் நிலையத்திலேயே மசாஜ் செய்தார்.

இந்த காட்சியை யாரோ போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த போட்டோ காட்சிகள் ஹர்தாய் மாவட்டம் முழுவதும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மேலாடை இன்றி இருப்பது, அவருக்கு பெண் மசாஜ் செய்வது, மசாஜ் செய்யும்போது பெண்ணின் கணவரும் சப்-இன்ஸ்பெக்டர் அருகில் இருப்பது போன்ற காட்சிகள் போட்டோவில் இடம் பெற் றுள்ளது.

இந்த போட்டோக்களை பார்த்ததும் மகளிர் அமைப்புகள் கொதித்து எழுந்தன. போலீஸ் நிலை யத்தில் பெண்ணை மசாஜ் செய்ய சொல்லி கொடுமைப்படுத்துவதா? என்று கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டத்தின்போது சப்&இன்ஸ்பெக்டர் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

இதுபற்றி மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, அந்த பெண் மூலிகை தைலத்தை எடுத்து வந்து இருந்தார். மூட்டு வலிக்கு பயன்படுத்தும் அதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். அந்த பெண் புகார் கொடுக்க வரவில்லை என்று தெரிவித்தார்.

ஏற்கனவே இந்த போலீஸ் நிலையத்துக்கு செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் புகார் கொடுக்க வந்தபோது அவரை தனது ஷூவுக்கு பாலிஷ் போடுமாறு சப்-இன்ஸ்பெக்டர் வற் புறுத்தியதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இதையடுத்து தற்போது அவர் மீது மசாஜ் புகார் கூறப்பட்டுள்ளது.