Home ஜல்சா பஸ்சில் நடிகை பின்னால் சுய இன்பம் அனுபவித்த ஆண்..

பஸ்சில் நடிகை பின்னால் சுய இன்பம் அனுபவித்த ஆண்..

44

timthumbலிமா: பெரு நாட்டில் சமீபத்தில் மரணமடைந்த பிரபல பாடகி எடிடா குர்ரெராவின் மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவரை அவரது கணவரே கொலை செய்துள்ளதாக தற்போது கூறப்படுகிறது. இதையடுத்து எடிடாவின் கணவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் எடிடாவின் மரணத்தைத் தொடர்ந்து பெரு நாட்டில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் மிகப் பெரிய கொடும களும் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளதால் உலக மனித உரிமை அமைப்புகள் மற்றும் பெண்கள் அமைப்புகளின் பார்வை பெரு மீது விழுந்துள்ளது
திடீர் மரணம்… கொரோசான் செர்ரனோ என்ற இசைக் குழுவை உருவாக்கி நிகழ்ச்சிகளைக் கொடுத்து வந்தவர் எடிடா. இவர் கடந்த மார்ச் மாதம் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் மரணமடைந்தார்.
தலைமறைவு…. ஆனால் அவர் கடுமையாக தாக்கப்பட்டு அதனால்தான் உயிரிழந்தார். இதைச் செய்தது அவரது கணவர் பால் ஒலோர்டிகா என்பது பின்னர் தெரிய வந்தது. தற்போது பால் தலைமறைவாகி விட்டார்.

ஓடும் பேருந்தில்…. கடந்த மே மாதம்தான் பிரபல பாடகியும், நடிகையுமான மகலி சோலியர் என்பவர் தனக்கு நேர்ந்த அவமரியாதை குறித்துத் தெரிவித்திருந்தார். லிமாவில் அவர் பஸ்ஸில் பயணித்தபோது தனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு நபர், சுய இன்பம் அனுபவித்து தன்னை கொடுமைக்குள்ளாக்கியதாக அவர் கூறியிருந்தார்.
பகிரங்க விவாதங்கள்… இதன் மூலம் பெரு நாட்டில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் அக்கிரமங்கள் குறித்த சர்ச்சைகள் வெடித்தன. சமூக ரீதியாக மிகவும் பழமைவாத நாடாகும் பெரு. இங்கு 3 கோடி பேர் வசிக்கிறார்கள். இப்படிப்பட்ட செயல்கள் இதுவரை அங்கு பெரிதாக எழுந்ததில்லை, விவாதிக்கப்பட்டதும் இல்லை. ஆனால் தற்போது பகிரங்க விவாதங்கள் வெடித்துள்ளன
பிரச்சாரம்… இதுகுறித்து மகளிர் மனித உரிமை அமைப்பின் தலைவரான மிலனா ஜஸ்டோ கூறுகையில் பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து அமைதி காக்கக் கூடாது. வெளிப்படையாக கூற வேண்டும் என்று நாங்கள் பிரசாரம் செய்து வருகிறோம் என்றார்.
தற்கொலைகள்… கடந்த ஆண்டு மட்டும் பெருவில் 131 பெண்கள் தற்கொலை செய்துள்ளனராம். அவர்களுக்கு 18 முதல் 34 வயதுக்குள்தான் இருக்கும்
ரகசியக் கொடுமைகள்… பெருவைப் பொறுத்தவரை பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், வீட்டுக் கொடுமைகள் அனைத்தும் ரகசியமாகவே மறைந்து போய் விடும். அதை யாரும் வெளிப்படையாக சொல்ல முன்வர மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான பெண்கள் இதையெல்லாம் வெளியில் சொல்வதே இல்லை.
பெண்களின் அவல நிலை…. மகலி சோலியர் தனது நாட்டுப் பெண்கள் நிலை குறித்துக் கூறுகையில், பெரு பெண்கள் பொது இடங்களில் பாலியல் ரீதியாக சித்திரவதை செய்யப்படுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இது மிகவும் கொடுமையானது. பெருவில்தான் இந்த அவல நிலை அதிகம் என்று நான் கருதுகிறேன்.
வேடிக்கை… ஓடும் பஸ்ஸில் என்னை அந்த நபர் அவமானப்படுத்தியபோது சுற்றிலும் நிறையப் பேர் இருந்தனர். ஆனால் அனைவரும் அதைத் தட்டிக் கேட்கவில்லை. மாறாக வேடிக்கைதான் பார்த்தனர் என்றார் அவர்
சித்ரவதை…. கடந்த ஆண்டு பெருவில் பொது இடங்களில் பாலியல் சித்திரவதைக்குள்ளான பெண்களின் அளவு 88.4 சதவீதமாக இருந்ததாக ஒரு கணக்கு கூறுகிறது. ஆனால் புகார் கொடுத்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்
ஆண்கள் ஆதிக்கம்… உலகமே தலைகீழாக மாறிப் போயுள்ள நிலையில் பெருவில் இன்னும் பெண்களுக்கு 2வது இடம்தான். ஆண்கள்தான் அங்கு ஆதிக்கம் செலுத்துகின்றனர். பெண்களை போகப் பொருளாகவும், இளக்காரமாகவும்தான் பெரு சமுதாயம் நினைப்பது, நடத்துவது குறிப்பிடத்தக்கது
புதிய சிக்கல்… தற்போது பாடகி எடிடாவின் மரணமும், சோலியரின் பரபரப்புக் குற்றச்சாட்டும் பெரு அரசுக்கும், ஆண்களுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது