Home ஆரோக்கியம் பனிக்காலத்தில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு இருக்கு… ஜாக்கிரதை

பனிக்காலத்தில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு இருக்கு… ஜாக்கிரதை

39

அதிகப்படியாக வறட்சியடைந்த சருமம், அரிப்பு ஏற்படுதல் கூட ஒருவகையில் சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளில் ஒன்று தான். அது சாதாரணமாக பனிக்காலத்தில் உண்டாகக் கூடிய ஒன்று என நினைத்துக் கொண்டு அஜாக்கிரதையாக இருந்துவிடக் கூடாது. இன்னும் சில அறிகுறிகள் கூட பனிக்காலத்தில் உண்டாவதுண்டு. அவை என்னென்ன?

பனிக்காலத்தில் சில விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். மற்ற காலங்களை விட பனிக்காலத்தில் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைத்துக் கொள்வது அவசியம்.

சருமத்தை அதிக வறட்சியுடன் வைத்திருக்கக் கூடாது.

பனிக்காலத்திலும் நீங்கள் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. இது புற ஊதா கதிர்களின் தாக்கத்தில் இருந்து உங்களைக் காக்கும். சரும வறட்சியைத் தடுக்கும்.

பனிக்காலத்தில் நீங்கள் சூடான நீரில் குளிப்பவராக இருந்தால் அதை முதலில் நிறுத்துங்கள். அதற்கு பதிலாக, கை பொறுக்கும்படி சூடு உள்ள, அல்லது வெதுவெதுப்பான நீரை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

மாய்ச்சரைஸர் பயன்படுத்துங்கள். பனிக்காலத்தில் அதிகப்படியான குளிரும் வறட்சியான காற்றும் கூட உங்கள் சருமத்தை மிக அதிகமாக வறட்சியடையச் செய்யும். மாய்ச்சரைஸர் பயன்படுத்தினால் சற்று சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

நிச்சயமாக பனிக்காலத்தில் ஒமேகா 3 நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். குறிப்பாக, பட்டர் ஃபுரூட், மீன், நட்ஸ், முட்டை ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.