Home ஆரோக்கியம் தாடைவலி மாரடைப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்!

தாடைவலி மாரடைப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்!

25

downloadஇந்தக் காலத்­துல யாரையும் நம்ப முடி­ய­லீங்க’ என்று சிலர் புலம்­பு­வதைக் கேட்­டி­ருப்போம். இப்­போ­தெல்லாம் நோயைக் கூட அப்­படி நம்ப முடி­வ­தில்லை. நெஞ்­சு­வலி ஏற்­பட்டால் அது மார­டைப்பின் அறி­கு­றி­யாக இருக்கும் என்­பது நமக்குத் தெரியும். சம்­பந்­த­மில்­லாமல் தாடையில் வலி ஏற்­பட்டால், அதுவும் மார­டைப்பின் அறிகுறிதான் என்­கி­றார்கள் ஆய்­வா­ளர்கள். மாறு­வே­டத்தில் இப்­ப­டியும் அறி­கு­றிகள் காண்­பிக்­குமா? இதய சிகிச்சை மருத்­து­வ­ரான கிரு­பா­கரன் என்ன சொல்­கிறார் என்று கேளுங்கள் வழக்­க­மாக மார­டைப்பு ஏற்­ப­டு­வதன் அடை­யா­ள­மாக நெஞ்­சுதான் வலிக்கும்.

இதற்கு கூலயீiஉயட ளலஅயீவடிஅ என்று பெயர். எதிர்­பா­ராத வகையில் ஏற்­படும் தாடை­வலி போன்ற அறி­கு­றிகள் ஏற்­ப­டு­வதை ஹவலயீiஉயட ளலஅயீவடிஅ என்று சொல்­லலாம். இது தாடை­வ­லி­யாக மட்­டு­மல்ல கழுத்து வலி, இடது தோளில் வலி, முதுகு வலி என்று சம்­பந்­த­மில்­லாத இடத்­திலும் அறி­கு­றியைக் காண்­பிக்கும். இந்த வலி இத­யத்­தி­லி­ருந்து தான் உரு­வாகும். ஆனால், இத­யத்­துடன் தொடர்­பில்­லாத இடத்தில் வலிப்­பது போல் நமக்குத் தோன்றும். அதற்­காக, தாடை­வலி வந்­தாலே மார­டைப்­பா­கத்தான் இருக்கும் என்று பயப்­பட வேண்­டி­ய­தில்லை.

இது­போன்ற சுநகநசசநன யீயin அறி­குறி, 10 இதய நோயா­ளி­களில் ஒரு­வ­ருக்­குத்தான் ஏற்­ப­டு­கி­றது. அதே நேரத்தில், தாடை­வ­லியை பல் சம்­பந்­தப்­பட்ட பிரச்சி­னை­யாக இருக்கும் என்றோ, ஈறு­வ­லி­யாக இருக்­கலாம் என்றோ அலட்­சி­ய­மா­கவும் இருந்­து­விடக் கூடாது. குறிப்­பாக உணவை மெல்­லும்­போது அதி­க­மாகும் தாடை வலி, காலை நேரத்தில் ஏற்­படும் வலி போன்­ற­வற்றை சாதா­ர­ண­மாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நம் சந்­தே­கத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் பொது மருத்­து­வ­ரி­டமோ இதய சிகிச்சை மருத்துவரிடமோ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. ஒரு இ.சி.ஜி. எடுத்துப் பார்த்தால் தாடை வலியின் நிஜக் காரணம் என்னவென்று தெரிந்துவிடும்.