Home ஜல்சா மிட்டாய் விற்கப் போன கணவர்.. சூப் கடைக்காரருடன் ஓடிய மனைவி.. சித்திரவதைக்குள்ளான குழந்தை!

மிட்டாய் விற்கப் போன கணவர்.. சூப் கடைக்காரருடன் ஓடிய மனைவி.. சித்திரவதைக்குள்ளான குழந்தை!

27

fo3e3mfpwife-her-paramourகணவர் மிட்டாய் விற்பதற்காக வெளியூருக்குப் போய் விட்ட நிலையில் தனது கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்தார் மனைவி. இந்த கள்ளக்காதலுக்கு குழந்தை இடையூறாக இருந்ததால் அதை அடித்து உதைத்து சித்திரவதை செய்தார். கடைசியில் அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் அப்பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலரையும் கைது செய்தனர்.
அப்பா எங்கே என்று கேட்டு குழந்தை அழுததால்தான் கடும் ஆத்திரமடைந்து தனது மகளை அடித்துத் துன்புறுத்தியுள்ளார் சிந்து மார்க்கரெட் என்ற அந்த 26 வயதுப் பெண். அக்குழந்தைக்கு ஐந்தரை வயதாகிறது.
சிந்துவின் கணவர் பெயர் வினோத். 34 வயதான இவர் மிட்டாய் வியாபாரி. கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களின்போது மிட்டாய் கடை போட்டு திருவிழா முடியும் வரை அங்கேயே தங்கி வியாபாரம் பார்த்து விட்டுத் திரும்புவார். இவரது சொந்த ஊர் நாகர்கோவில் இடலாக்குடி.

கணவர் அடிக்கடி இப்படி வெளியூர் போய் விடுவதாலும், அவரது சம்பாத்தியத்தில் திருப்தி அடையாததாலும், கசப்புணர்வுடன் இருந்து வந்தார் சிந்து. இந்த நிலையில்தான் சூப் கடைக்காரர் ரஞ்சித்குமார் என்பவர் சிந்தவுக்கு அறிமுகமானார். இருவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்தது. ரஞ்சித் குமார் வட சேரியைச் சேர்ந்தவர். மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் வினோத் திருவிழா ஒன்றில் கடை போட கிளம்பிப் போனார். அவர் போனதும் தனது மகளோடு வீட்டை விட்டு வெளியேறினார் சிந்து. ரஞ்சித் குமாரும், அவரும் புரவசேரியில் வீடு எடுத்து குடித்தனத்தை ஆரம்பித்தனர்.

ஆனால் அவர்களின் குதுகூலத்திற்கும், உல்லாசத்திற்கும் பெரும் இடையூறாக தோன்றினாள் சிந்துவின் மகள். அப்பா எங்கம்மா என்று கேட்டு அவள் அடிக்கடி சிந்துவை அனத்தியுள்ளாள். இதைக் கேட்டு பெரும் ஆத்திரமடைந்த சிந்து, அடித்து உதைத்துள்ளார். ரஞ்சித்குமாரும் அடித்துள்ளார்.
சிறு குழந்தை என்றும் பாராமல் சிந்து தனது மகளை அடித்துத் துன்புறுத்துவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குப் புகார் அனுப்பினர். போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தியபோது கள்ளக்காதல் கதை வெளியே வந்தது. இந்த நிலையில் வெளியூர் போய் விட்டு வீடு திரும்பிய வினோத்துக்கு நடந்த சம்பவம் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார். நாகர்கோவில் போலீஸில் அவர் புகார் கொடுத்தார்.
இதையடுத்து குழந்தையை அடித்துச் சித்திரவதை செய்த குற்றத்திற்காக சிந்துவையும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக ரஞ்சித் குமாரையும் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்மணி கைது செய்தார். குழந்தை மீட்கப்பட்டு தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.