Home ஜல்சா செக்ஸ் உணர்வை தூண்டும் மல்லிகை… ஆண்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!!!

செக்ஸ் உணர்வை தூண்டும் மல்லிகை… ஆண்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!!!

20

கோடை காலத்தில் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கக்கூடியது மல்லிகைப்பூ. இது தலையில் சூட மட்டுமின்றி, இதன் இலை, மலர் என அனைத்தும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இது அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மல்லிகை மலர்கள் பலவகை இருந்தாலும் அனைத்து மலர்களிலும் ஏரத்தாள ஒரே குணமே காணப்படுகிறது. இப்போது மல்லிகையின் மகத்தான பயன்களை பற்றி காண்போம்.

நோய் எதிர்ப்பு சக்தி

மல்லிகையின் மருத்துவ குணங்கள் பல ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதில் லினோல், பென்சோயிக் அசிடேட், இண்டோல், ஜஸ்மோன், சாலிசிலிக் அமிலம், ஆல்கலாய்டுகள் ஆகியவை அடங்கியுள்ளன. இந்த இயற்கை மூலிகை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நம்மை நோய்கள் அண்டாமல் பாதுகாக்கிறது.

மன அழுத்தம்

மல்லிகை பூ டீ மிகவும் பிரபலமானது. இதை குடிப்பதன் மூலம் மன அழுத்தம் குறைகிறது. இது மனதை தெளிவுபடுத்தி மனதை அமைதியாக்குகிறது.

பாலின உணர்வு

மல்லிகைப்பூவை பெண்கள் தலையில் வைத்துக்கொண்டாலோ அல்லது தலையணையின் அடியில் வைத்துக்கொண்டாலோ இது தம்பதிகளின் மன இறுக்கத்தை போக்கி பாலின உணர்வுகளை தூண்டக்கூடியாதக உள்ளது. மேலும் மல்லிகையின் இலை ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது.

வாய் பிரச்சனைகளை போக்கும்

மல்லிகைப்பூவின் இலைகள் வாயில் உண்டாகும் பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. இது பல்வலி, ஈறு பிரச்சனைகள் போன்றவற்றை நீக்குகிறது. அது மட்டுமின்றி, தலைவலி, உடலில் உண்டாகும் அலர்ஜியை போக்குகிறது.

புண்களை ஆற்ற உதவுகிறது

மல்லிகைப்பூ கீறல்கள் மற்றும் புண்களை ஆற்ற உதவுகிறது. இதனை அரோமா தெரபி மூலம் எடுத்துக்கொள்ளும் போது இதன் வாசனை மனதை அமைதிப்படுத்துகிறது. மனதில் நேர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கிறது.

மசாஜ் ஆயில்

மல்லிகைப்பூ எண்ணெய்யால் மசாஜ் செய்யும் போது உடலில் உள்ள வலிகளை நீக்குகிறது. இது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு அளிக்கிறது.

இருதய பிரச்சனை

மல்லிகைப்பூ டீயை தினமும் பருகி வந்தால், கார்டிவாஸ்குலர் இருதய நோய் பாதிப்பில் இருந்து தப்ப முடியும்.

குறிப்பு

கர்ப்பமாக இருக்கும் பெண்களும், பால் கொடுக்கும் அன்னையர்களும் மல்லிகையை மருந்தாக எடுத்துகொள்ள கூடாது.

ஒற்றைத்தலைவலி இருப்பவர்களுக்கும் இது உகந்ததல்ல. இதன் அதிக வாசனை வாந்தியை உண்டு செய்யலாம்.