Home ஆரோக்கியம் சுளுக்கு குறைவதற்கு மருத்துவ குறிப்புகள்

சுளுக்கு குறைவதற்கு மருத்துவ குறிப்புகள்

15

3c627c22-6d86-4304-a323-186111dba404_S_secvpfஆமணக்கு எண்ணெயை கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி அதன் மேல் புளிய இலையை ஒட்ட வைத்து இரண்டு மணிநேரம் கழித்து வெந்நீரால் உருவி விட்டால் கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு குறையும் .

எலுமிச்சை இலைகளை எடுத்து வெண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் சுளுக்கு, வலி குறையும்.

சம அளவு எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் எடுத்து நன்றாக கலந்து சுளுக்கு இருக்கும் இடத்தில் சிறிது விட்டு நன்கு தடவி விட்டு வந்தால் சுளுக்கு குறையும்.

சம அளவு ஆமணக்கு எண்ணெய் மற்றும் பூண்டு எண்ணெயை எடுத்து ஒன்றாக கலந்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் நன்கு தடவி வந்தால் சுளுக்கு குறையும்.

முட்டைகோஸின் வெளிப்புறத்தில் இருக்கும் கடின பகுதியை உரித்து நீர் விட்டு மென்மையாக மாறும் அளவுக்கு நன்றாக காய்ச்சி பிறகு அந்த முட்டைகோஸை எடுத்து பருத்தி துணியில் வைத்து சுளுக்கு இருக்கும் இடத்தில் 3 மணி நேரம் கட்டி வந்தால் சுளுக்கு குறையும்.

பாதாம் எண்ணெய் எடுத்து அதனுடன் பூண்டை அரைத்து அதன் சாறை சேர்த்து நன்றாக கலந்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து பின் நன்றாக தேய்த்து விட்டால் சுளுக்கு குறையும்.