Home ஆரோக்கியம் சிவப்பு ஒயின் உடல் நலத்துக்கு கேடு: புதிய ஆய்வில் தகவல்

சிவப்பு ஒயின் உடல் நலத்துக்கு கேடு: புதிய ஆய்வில் தகவல்

17

download (2)தினமும் ‘சிவப்பு ஒயின்’ சாப்பிட்டால் புற்றுநோய் தாக்குதலில் இருந்து உடலை காப்பாற்றிக் கொள்ள முடியும். மேலும் உடல் எடை அதிகரிக்காது. மாரடைப்பு ஏற்படாது என முந்தைய ஆய்வுகள் மூலம் அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

ஆனால், தற்போது இது முற்றிலும் தவறானது. ஏற்கனவே கூறப்பட்ட கருத்துக்கள் முரண்பாடானது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இங்கிலாந்தை சேர்ந்த சால்லி டேவிஸ் என்ற மருத்துவ அதிகாரி ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ஒயின் அல்லது மது அருந்தும் ஆண் மற்றும் பெண்ணின் உடலில் ஒரே அளவில்தான் ஆல்கஹால் செல்கிறது. எனவே இருபாலருக்கும் புற்றுநோய் பாதிப்பு உள்ளிட்ட மற்ற நோய்கள் ஏற்படும்.

குறிப்பாக சிவப்பு ஒயின் அருந்தும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் 13 சதவீத அளவில் தாக்கும் அபாயம் உள்ளது. இது கடந்த 1995–ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, சிவப்பு ஒயின் அருந்துவது உடல் நலத்துக்கு கேடு என அறிவிக்கப்பட்டுள்ளது.