Home ஆரோக்கியம் சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு!

சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு!

28

ht703புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது. புகை பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு கேன்சர், காசநோய் போன்றவை உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த விவரம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
சிகரெட் பிடிப்பது மூளையும் பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதை இந்திய தேசிய மூளை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

புகையில் உள்ள நச்சுத்தன்மையுள்ள பொருட்கள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை கோபமூட்டச் செய்கின்றன. அவை மத்திய நரம்பு மண்டலத்தில் உள்ள சுகாதாரமான “செல்”களை தாக்குகின்றன.
இதனால் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும். இதன் மூலம் உடலில் பலவிதமான நோய்கள் உருவாகும்.
இதன் ஒரு பகுதியாக மூளையில் உள்ள “மைக் ரோக்லியா” என்ற முக்கிய செல்களும் பாதிக்கப்படு கின்றன. இதையடுத்து மூளையும் பாதிக்கப்படுகிறது.

இந்திய தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த தெபாபிரியா கோஷ் டாக்டர் அனில்பான் பாசு ஆகியோர் ஆய்வு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.