Home ஆரோக்கியம் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா?

குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா?

20

india-kashmir-safforn__large (1)சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும், படித்தவர், படிக்காதவர் என்ற பேதமின்றி நம்பப்படும் ஒரு விஷயம் என்னவென்றால், பெண்கள் தங்களது கற்ப காலங்களில், காய்ச்சிய பாலில் குங்குமப்பூவை கலந்து, தொடர்ந்து இரவு வேளையில் குடித்து வந்தால், பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது தான்.

சாப்ரன் குரோக்கஸ் என்ற தாவரத்தின் பூவிலுள்ள சூலக தண்டு, மற்றும் சூலக முடிகள் ஆகியவை, தனியே பிரிக்கப்பட்டு, வெயிலில் உலர்த்தப்பட்டு பின்பு அதனை பொடியாக்கித்தான் குங்குமபூவை தயாரிக்கிறார்கள்.

சரி உண்மையில் குங்குமப்பூவை கற்பஸ்திரிகள் பயன்படுத்தி வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்குமா என்றால், அதில் துளி கூட உண்மையில்லை என்பதே உண்மை. மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இதில் குங்குமபூவிற்கு எந்த பங்கும் இல்லை, ஆனால், இதனை காட்டிலும் பல எண்ணற்ற பயன்களை கர்ப்பிணிப்பெண்களுக்கு தரக்கூடியது குங்குமப்பூ. கர்ப்பம் தரித்துள்ள தாய்மார்கள் இதனை வெற்றிலையுடன் கலந்து தின்றாலும் அல்லது காய்ச்சிய பாலில் இட்டு அருந்தினாலும், பிறக்கும் குழந்தை அழகாகவும், பிரசவ வலி இன்றியும் குழந்தை பிறக்கும் என்பர். மாதவிலக்கு, வலியைப் போக்கும் குணம் கொண்டது.

இதயத்தை பலப்படுத்த உதவும். அதேசமயம், குங்குமப்பூ சாப்பிட்ட கர்ப்பிணிகளுக்கு குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என்று டாக்டர்களே சர்டிபிகேட் தருகிறார்கள். குங்குமப்பூ துவர்ப்பு தன்மை கொண்டது. இது ஜீரணத்துக்கு நல்லது. சமைத்து முடித்ததும் அனைத்து உணவிலும் குங்குமப்பூவை கலக்கலாம். இதனால் நல்ல மணம் வீசும். உணவும் சுவையாக இருக்கும்.

ஜலதோஷம், இருமல், கேன்சர், பார்வை குறைபாடு, போன்ற பயன்கள் உண்டு. கர்ப்பணிகள் கருவுற்ற 5ம் மாதத்தில் இருந்து 9ம் மாதம் வரை சாப்பிடலாம். இதனால் ரத்தம் சுத்தமடையும். குழந்தை பிறந்த பிறகும் சாப்பிடலாம். இது ரத்த சோகை ஏற்படாமலும் தடுக்கும். நன்கு பசியை தூண்டும். ஆனாலும், குங்குமப்பூவை குறிப்பிட்ட அளவே உட்கொள்ள வேண்டும். அதிக அளவு சாப்பிடுவது தவறு.

சூடான தண்ணீரில் 4, 5 குங்குமப்பூவை போட்டால் பூ மெதுவாக கரைந்து மின்னக்கூடிய தங்க நிறத்தில் தண்ணீர் மாறும். நறுமணம் வீசும். 24 மணி நேரத்துக்கு பூவிலிருந்து நிறம் வந்து கொண்டிருந்தால் அது ஒரிஜினல். சூடான தண்ணீரில் பூவை போட்டவுடன், சிவப்பு நிறத்தில் தண்ணீர் மாறி விடும். நறுமணம் வீசாது. சிறிது நேரத்திலேயே பூவிலிருந்து நிறம் வருவது நின்று விட்டால் அது டூப்ளீகேட்.