Home குழந்தை நலம் ஒரு ஆண், அப்பாவாக ஆவதற்கான அறிகுறிகள்

ஒரு ஆண், அப்பாவாக ஆவதற்கான அறிகுறிகள்

53

becoming_a_first_time_fatherஒரு ஆண், அப்பாவாக ஆவதற்கான அறிகுறிகள் – அருமையான ஆலோசனை
திருமணம் ஆன ஒவ்வொரு ஆணுக்கும் தான் எப்போது அப்பாவாக போகிறோம் என்ற ஏக்க‍ம் கலந்த ஆசை கட்டாயம் இருக்கும். இந்த ஆசை சில ஆண்களுக்கு எளிதாக நிறைவேறி,
அப்பா என்றழைக்க‍ குழந்தை பிறந்து விடுகிறது.மேலும் கூட்டுக் குடும்ப த்தில் இருக்கும் தம்பதியாக இருந்தால் இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி ஆலோசனை கள் பல சொல்லவும், எப்ப‍டி நடந்துகொள்ள‍ வேண்டும் என்பதை இலை மறை காயாக‌ மேற்கோள் காட்ட‍வும் உதவியாக இருப்பார் கள். ஆனால் இன்று தனிக்குடித்த‍னங்கள் பெருகி விட்ட‍து. அதனால் ஒரு ஆணுக்கு, தனது மனைவி கர்ப்ப‍மாக இருக்கிறாளா இல்லையா என்ற அடிப்படையான விஷ யங்கள் அவர்களுக்கு தெரிவ தில்லை. அப்பேற்பட்ட‍ ஆண்களுக்கு இந்த பதிவு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதில் எள்ள‍ளவும் சந்தேக மில்லை. ஆம் ஒருஆணுக்கு தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறா ளா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள‍ பல அறிகுறிகள் உண்டு.
உங்கள் மனைவியின் மார்பகங்களில் தினவு ஏற்பட்டாலோ அல்ல‍து முதுகு வலி, உச்சபட்சமான வாசனை உணர்வு உட்பட பல ஆரம்ப அறிகுறிகள் உங்கள் மனைவி கர்ப்ப‍மாக இருக்கிறாள் என்பதனை கண்டறிய முடியும். இதோடு வேறு வித்தியாச மான கர்ப அறிகுறிகள்கூட உங்களது மனைவியிடம் கண்டறியலாம். அதிலும் உறவு கொண் டு 14 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் உங்களது மனைவி க்கு மாத விடாய் ஏற்படவில்லை என்றால் இப்போது உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கிறாளா? இல்லை யா? என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கும். ஆனால் உங்கள் மனைவிக்கு மாதவிடாய் சுழற்சி தள்ளிப் போனால் மட்டும் கர்ப்பமாக இருக்கிறோம் என்று முடிவு செய்து விடமுடியாது. இரு ப்பினும், மாதவிடாய் சுழற்சி தள்ளிப்போவதுடன், ஒருசில அறிகுறிகளும் தென்பட்டால், கர்ப்பமாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளலாம். அதிலும் கீழே குறிப்பிட்டுள்ள 17 அறிகுறிகள் தென்பட்டால், கர்பம் அடைந்திருப்ப தை சுலபமாக அறிந்து கொள்ள முடியும். அந்த அறிகுறிகளைப்பார்ப்போ மா!!!
.
1. மூச்சு திணறல்
.
உங்கள் மனைவி மாடிப்படி ஏறும்போது திடீரென்று மூச்சு திணறல் ஏற்படுகிறதா? அப்படியானால் அது கர்பமாக இருப்ப‍தால் இருக்கலாம். மேலும் வளரும் கருவிற்கு ஆக்சிஜன் தேவை என்பதால், சுவாசத்திற்கு ஒரு சிறிய குறுகிய இடைவெளி ஏற்படலாம். ஏன் இந்த நிலை மையானது கர்ப்ப காலம் வரையிலும் தொட ரலாம். ஏனெ னில் வளர்ந்து வரும் குழந்தை, உங்களது மனைவியின் (தாயின்) நுரையீரல் மற்றும் உதரவிதானம்மீது அழுத்தம் கொடுக்க ஆரம்பிப்பதன் விளைவா க ஏற்படுகிறது.
.
2. மார்பகங்களில் ஏற்படும் தளர்வு
.
உங்கள் மனைவி உள்ளாடையை அணியும்போது லேசான அவர்களுக்கு சிரமம் ஏற்படுவதைபோல் உணர்ந்தாலோ அல்லது மார்பகங்கள் கொஞ்ச ம் பெரியதாக உள்ளது போன்ற உணர்வு வந்தாலோ அல்லது மென்மையான மற்றும் கனத்த மார்பகங்களி ன் உணர்வு, மார்பக காம்பு கருமையடைந்தாலோ மற்றும் மார்பு நரம்புகள் விறைப்படைந்தாலோ உங்க ளது மனைவி கர்ப்பமாக இருப்பதற்கு ஒரு முதல் அறி குறியாக இருக்கமுடியும். எனவே இந்த அசௌகரியத் தை தவிர்ப்பதற்கு, படுக்கைக்கு செல்லும் முன் உங்கள் மனைவியிடம் மிகவும் எளிதான உள்ளாடையை அணியச் சொல்ல‍லாம்.
.
3. சோர்வு
.
உங்களது மனைவிக்கு புத்த‍கம் படிக்கும் பழக்க‍ம் உடையவராக இருந்த ல், அவர்களை சற்று நேரம் உற்றுநோக்குங்கள். அவர்கள் புத்தகத்தில் ஒரு பக்கத்தை படித்து முடிப்பதற்கு முன்ன தாகவே, தூங்கி வழிகிறார்கள் என்றால் அல்லது திடீ ரென்று சோர்வடைந்து காணப்பட்டாலோ அது அவர்களி ன் உடலில் அதிகமாக சுரக்கும் ஹார்மோன்கள் காரண மாக இருக்கலாம். ஆம் பல பெண்களுக்கு சோர்வு முதல் மூன்று மாதங்கள் தொடர்ந்து இருக்கும். ஆனால் பின்னர் இது விட்டு விட்டு வரும்.
.
4. குமட்டல்
.
அநேக கர்பிணி பெண்களுக்கு கருவானது 6 வாரங்கள் சேர்ந்து இருக்கும் போது குமட்டல் ஏற்படுகிறது. ஆனால் சிலருக்கு காலை சுகவீனம்(துரதிர்ஷ்டவசமாக காலை மதிய ம் மற்றும் இரவு ஏற்படலாம்) ஏற்படுவதை உணர முடியும். இது இரண்டாவது 3 மாத கால கட்டத்தில் நுழையும்போது பெரும்பாலும் குறைய வேண்டும். இடை யிடையே வயிறு நிரம்பக் கூடிய நொறுக்கு தீனி மற்றும் இஞ்சி மிட்டாய் போன்றவ ற்றை வாங்கி வந்து உங்களதுமனைவியை சாப்பிடச்சொல்லுங்கள்.
.
5. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
.
உங்களது மனைவிக்கு திடீரென்று சிறுநீர் கழிக்காமல் இரவு முழுவதும் தூங்கமுடியவில்லை என்றால், கர்ப்பம் ஏற்பட்டிருப்பதற்கு ஒரு அடையாளமாக இருக்கலாம் என்பதை நீங்கள் உணரு ங்கள். கர்ப்ப காலத்தில் உங்களது மனைவியின் உடலான துகூடுதல் திரவங்களை உற்பத்திசெய்வதன் மூலமாக, சிறு நீர்ப்பைக்கு அதிக வேலை இருப்பதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை உங்கள் மனைவிக்கு ஏற்படுகிறது.
.
6. தலைவலி
.
உங்களது மனைவி கர்ப்பமாக இருப்பதன் ஆரம்ப அறிகுறி களில் ஒன்று, ஹார்மோன் மாற்றங்கள் விளைவாக அவர் களுக்கு ஏற்படும் தலைவலியாகும்.
.
7. பின் முதுகு வலி
.
உங்க மனைவிக்கு முதுகுவலி இல்லாதபோது, பின்முதுகு லேசாக தளர் வாக காணப்பட்டால், அது தசைநார்கள் தளர்ந்து வருவதன் காரணமாக ஏற்படுகிறது. சொல்லப்போனால் இந்த வலி யானது அவர்களது கர்ப்ப காலம் முழுவதும் தொடர்ந்து இருக்கும். ஏனென்றால், கர்பத்தின் போது அவர்களது எடை அதிகரிப்பதால், ஈர்ப்பு மையம் விலகுவ தன் காரணமாக இது ஏற்படுகிறது.
.
8. தசைப்பிடிப்பு
.
இது உங்களது மனைவிக்கு மாதவிலக்குக்கு முன் ஏற்படும் அறிகுறியா? அல்லது கர்ப்பமா? என்பதைச் சொல்ல கடின மாக இருக்கிறது. ஆனால் யாரோ சுரண்டுவதுபோல் உங்க ள் மனைவி உணர்வார்களேயானால் அது குழந்தை வளர் வதற்கு தயாராக கருப்பை நீட்சி அடைகிறது என்று அர்த்த ம்.
.
9. பசி அல்லது உணவு தாகம்
.
திடீரென்று, வயிறு போதுமான சிட்ரஸ் பெற முடி யாத நிலை அடையும்போது அல்லது வயிற்றில் அஜீரண கோளாறு முதலியவை புதியதாக தோன்று ம் பட்சத்தில் கர்பமாக இருக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ள முடியும்.
.
10. மலச்சிக்கல் மற்றும் வீக்கம்
.
கடந்த வாரம்தான் உங்களது மனைவிக்கு ஜீன்ஸ் பொருத்தமாக இருந்தது. ஆனால் இப்போது சற்று இறுக்கமாக இருந்தாலோ மற்றும் உடல் பெரியதாக காணப்பட்டாலோ அது செரிமான அமைப்பு குறைவ டைவதன் காரணமாக ஏற் படுகிறது. இது கர்ப்பத்தின் காரணமாக, கூடுதல் புரோஜெஸ்டிரோன் உருவாவ தன் மூலமாக ஏற்படுகிறது.
.
11. ஊசலாடும் மனம்
.
உங்களது மனைவிக்கு அடிக்கடி மனதில் சந்தோஷம், கஷ்டம் போன்ற மாற்றங்களை உணர்கிறார்கள் என்றால், உடல் நலம், புதிய ஹார்மோன்களை அனுசரிக்க ஆரம்பி த்து விட்டது என்று பொருள்.
.
12. அதிகரிக்கும் உடலின் அடிப்பகுதி
.
உங்களது மனைவி, வெப்பநிலை தீவிரமாக கர்ப்பிணியாக முயற்சி செய்கிறார்கள் என்றால், அவர்களது உடலின் அடிப் பகுதியின் வெப்ப நிலையை கருத்தரிப்புக்கு சாத்தியமாக உயர்த்தி கொண்டிருக்கிறார்கள். இரண்டுவாரங்கள் வரை பொதுவாக இந்த வெப்பநிலையானது கருத்தரிப்பதற்கு சாத்தியமாக உயர்ந்துகொண்டு இருக் கும். அதன் பிறகும் இந்த உயர்ந்த வெப்ப நிலையானது காணப்பட்டால், உங்க மனைவி கருவுற்றிருப்பது உறுதிசெய்யப்படுகிறது .
.
13. சூப்பர் வாசனை
.
குப்பையை அன்றாடம் வெளியேற்றும் கடமையில் இருந்து தவறி விட்டார்கள் என்றால், குப்பையும் வாந்தி யெடுக்க தூண்டிவிடும். ஒரு சில வாசனைகள் தூண்டு தலாக இருந்தால் அல்லது வாசனைகளுக்கு உணர்வுகள் தூண்டப்படுவது அதிகமா னால், அதற்கு உங்களது மனைவி கர்ப்பமாக இருப்பது உறுதியாகி விட்டது.
.
14. தலைச்சுற்றல் அல்லது மயக்கமுறுதல்
.
இதுதிரைப்படங்களில் பெரும்பாலாககாட்டப்படும் ஆரம்ப அறிகுறியாகு ம். ஆனால் உண்மையின் அடிப்படை என்னவென் றால், குறைந்த சர்க்கரை அளவு அல்லது இரத்த அழுத்தம்கூட ஒரு குழப்பமான அத்தியாயத்தை ஏற்படுத்தும். எனவே உங்களது மனைவி நன்கு சாப்பிட்டு, போதுமான நீரை எடுத்து கொள்ள வேண் டும். இதன் பின்னரும் தொடர்ந்தால், உங்களது மனைவி கர்பம் தான்.
.
15. ஸ்பாட்டிங்
.
உங்களது மனைவிக்கு மாதவிடாய் வரவில்லையா? அல்லது அது சாதாரணமாக வருவதைவிட லேசாக இருந்ததுஎன்றால் மற்றும் எதிர்பார்க்கும் நாட்களை விட சற்று முன்பாகவே வந்துவிட்டது என்றால், இப்போது இருப்பது முட்டை கருவுறுதலின் போது ஏற்படக்கூடிய இரத்தபோக்கு ஆகும். ஏனென்றால் கருவுற்ற முட்டை கருப்பையின் சுவர்களில் பொருந் தும் போது, சற்று இரத்தப்போக்கு ஏற்படும்.
.
16 மாதவிடாய் தாமதமாக ஏற்படுவது
.
உங்களது மனைவிக்கு கர்ப்பம் உண்டாவதன் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் மாதவிலக்கி ன் (PMS) ஆரம்ப அறிகுறிகளாகவே இருக்கும். இவை இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியா சத்தை எப்படி சொல்வது? அதிகமாக சொல்லப் படும் தடயம் மாதவிடாய் தாமதமாவது.
.
17. நேர்மறையான கர்ப்ப சோதனை
.
உங்களது மனைவி கர்ப்ப‍மாக இருக்கிறாரா? இல்லையா என்று உறுதி யாக அறிந்து கொள்ள முடியவில்லை என்றால், ப்பீ ஸ்டிக் சோதனை (peestick test) செய்து கொள்ளும் வரை, அதை உறுதிசெய்துகொள்ள முடியாது. அந்த சோதனை முடிவு எதிர்மறையாக தங்களுக்கு உங்க மனைவி கர்ப்பம் இல்லை என்று தெரிய வந்தும் உங்க ளது மனைவிக்கு மாதவிடாய் தாமதமானால், ஒரு வேளை சற்று முன்னரே இந்த சோதனையை செய்து ள்ளீர்கள் என்று அர்த்தம். ஆகவே சில நாட்கள் வரை காத்திருந்து மீண்டும் முயற்சித்தால், நல்ல‍ அறிகுறி தென்படும்.