Home ஆரோக்கியம் உறக்கமும் – ஆச்சரியமூட்டும் நலன்களும்!!!

உறக்கமும் – ஆச்சரியமூட்டும் நலன்களும்!!!

36

Sleepஉடல் நன்றாக செயல்பட உறக்கம் இன்றியமையாதது. நல்ல உறக்கம், தெளிந்த மனநிலைக்கு வித்திடுகிறது. அதுமட்டுமின்றி, கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு போதுமான உறக்கம் அவசியமாகும். இதயம், உடல் எடை, மனம் ஆகியவை சீராக செயல்பட போதுமான உறக்கம் வேண்டும்.
சரியான உறக்கத்தால் ஏற்படும் நலன்களைக் கீழே காணலாம்.
நினைவாற்றலை மேம்படுத்தும்!
நாம் உறங்கும் போது நமது மூளை உறங்காமல் மும்முரமாக செயல்படுவதை அனைவரும் அறிவோம். நாம், நமது நினைவுகளை உறக்கத்தின் போது வலுப்படுத்திக்கொள்ளமுடியும். நாம் விழித்துக் கொண்டு இருக்கும் போது கற்றுக்கொண்ட திறன்களை உறக்கத்தின் போது வலுப்படுத்திக்கொள்ள முடியும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதனை ஆங்கிலத்தில் Consolidation என்பார்கள்.
நீங்கள் புதிதாக ஏதேனும்கற்றுக்கொள்ள முயற்சித்தால், உங்களின் உறக்கத்திற்கு பிறகு அச்செயலைச் செய்து பார்த்தால் மிகசிறப்பாக செய்ய இயலும்.
நீண்ட வாழ்நாளைப் பெற!
அதிகம் மற்றும் மிக குறைவான உறக்கம், குறைந்த வாழ்நாளுடன் தொடர்புடையதாக உள்ளது. உறக்கமின்மை நமது வாழ்க்கை தரத்தைக் பாதிக்க செய்யும்.
நீங்கள் நன்றாக தூங்கினால் நீண்ட வாழ்நாளைப் பெறலாம் என்பது அழிக்க முடியாத உண்மையாகும்.
அழற்சியைக் கட்டுப்படுத்தும்!
அழற்சி என்பது இதயநோய், பக்கவாதம், நீரிழிவு நோய் மற்றும் இளம் வயதில் முதிர்ச்சி அடைதல் ஆகியவைகளுடன் தொடர்புடையது.
உறக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் அழற்சி புரதத்தின் (Inflammatory Protein) நிலை அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்கின்றன.
C-reactive Protein, இதயநோயுடன் தொடர்புடையது. இரவில் ஆறு மணிநேரத்திற்கு குறைவாக உறங்கும் மக்களுக்கு, இந்த புரதத்தின்நிலை அதிகமாக உள்ளது என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
படைப்பாற்றலின் தூண்டுகோல்!
ஒரு நல்ல இரவு உறக்கத்திற்கு பின் செய்யும் எந்த படைப்பும் சிறப்பாக அமையும்.
இரவு உறக்கம் நினைவாற்றலை ஒருங்கிணைக்கும் மற்றும் பலப்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. அதுமட்டுமின்றி, நல்ல உறக்கம் நமது மூளையை மறுசீரமைப்பு செய்வதன் மூலம் படைப்பாற்றல் திறன் அதிக அளவில் தூண்டப்படுகிறது. நல்ல உறக்கம் கொள்பவர்கள், நல்ல படைப்பாளியாய் இருக்க முடிகிறது.
வெற்றியாளர்களை உருவாக்கும்!
நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருந்தால், உங்கள் செயல் திறனை மேம்படுத்த ஒரு எளிய வழி இருக்கிறது. அதுயாதெனில், நல்ல இரவு உறக்கமாகும்.
போதுமான இரவு உறக்கம் கொள்பவர்களுக்கு உடல்திண்மை அதிக்கரிக்கிறது. அத்துடன் குறைந்த பகல் நேர சோர்வை உணர்வார்கள்.
படிப்பாற்றலை மேம்படுத்தும்!
10 முதல் 16 வயதில் உள்ள குழந்தைகள், இரவில் ஒழுங்கற்ற மூச்சு பிரச்சனையால் அதிகம் பாதிக்கபடுகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது, தூக்கத்தில் குறட்டைவிடுதல், மூச்சுதிணறல் மற்றும் பல நோய்களாகும். இத்தகைய குழந்தைகளுக்கு கவன சிதறல் மற்றும் கற்றல் பிரச்சனைகள் ஏற்பபடுகின்றன.
மேலும் ஒரு ஆராய்ச்சியில், நல்ல உறக்கம் கொள்ளும் கல்லூரி மாணவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பதாகவும்; போதுமான உறக்கம் இல்லாத மாணவர்கள் படிப்பில் மந்தமாகவும் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
சில சமயங்களில் மாணவர்கள் தங்களுடைய படிப்பிற்காக உறக்கத்தை தியாகம் செய்கிறார்கள். ஆனால் இச்செயல் தூக்கமின்மையை அதிகப்படுத்தி, கற்றலைக் குறைக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் இத்தகை செயல்களைத் தவிர்ப்பது நல்லது.
கவனத்தை கூர்மைப்படுத்தும்!
8 மணி நேரத்திற்கு குறைவாக இரவில் உறங்கும் குழந்தைகளுக்கு, இயற்கைக்கு மீறிய சுறுசுறுப்பு, கவன குறைவு, மனக்கிளர்ச்சி அதிகம் ஏற்படுகின்றது.
கவன குறைவு ஏற்படாமல் இருக்க போதுமான உறக்கம் அவசியம்.
சீரான உடல் எடை பெற!
நீங்கள் உணவு கட்டுப்பாட்டில் இருக்க எண்ணினால், அதற்கு நீங்கள் முதலில் சீரான உறக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். போதிய ஓய்வு மேற்கொள்பவர்கள் விரைவில் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது. சீரான உடல் எடை பெற போதிய உறக்கம் அவசியம்.
குறைத்த மன அழுத்த நிலை!
உடல் நலத்தைப் பொருத்தவரை மனஅழுத்தம் மற்றும் உறக்கம் இவ்விரண்டும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், இவ்விரண்டும் Cardiovascular நோய்களுக்கு வித்துடுகிறது.
நல்ல உறக்கம் மன அழுத்தத்தைக் குறைகிறது மற்றும் இரத்த அழுத்தத்தையும் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
போதுமான உறக்கம் சீரான கொழுப்பு நிலையை உண்டாக்குகிறது. இதய நோயை கடுப்படுத்துகிறது.
விபத்துக்களை தடுக்கும்!
நெடுச்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் அதிகமானவை ஓட்டுனர்களின் செயல் திறன் குறைவால் ஏற்படுகின்றன. குடி போதையில் ஏற்படும் விபத்துகளைக் காட்டிலும், செயல் திறன் குறைபாட்டால் ஏற்படும் விபத்துகள் அதிகம் என நெடுச்சாலை துறை தெரிவிக்கின்றது.
பெரும்பான்மையான மக்கள் தூக்கமின்மையை ஒரு பெரிய பிரச்சையாக கருதுவதில்லை. ஆனால் தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் நாம் அளவிட முடிவதிர்க்கில்லை. தூக்கமின்மையால், எதிர்வினை நேரம் குறைகிறது மற்றும் முடிவெடுக்கும் திறம் கடுமையாக பாதிக்கபடுகிறது.
மதுவினால் ஏற்படும் பாதிப்புகளை விட ஒரு இரவு தூக்கமின்மையால் ஏற்படும் சீரழிவு அதிகம் என்பதில் ஐயமில்லை.
மன சோர்வில் இருந்து தெளிவாக!
உறக்கமின்மை மன சோர்வுக்கு வழி வகுக்கும். நல்ல உறக்கம், காரணமில்லாமல் எரிச்சல் அடைவதை தடுக்கும். அதுமட்டுமின்றி உணர்ச்சிகரமான திட நிலையோடு இருக்க வழி வகுக்கும்.