Home ஜல்சா இளம்பெண்கள் விற்பனைக்கு : அதிர்ச்சி விளம்பரம்.!

இளம்பெண்கள் விற்பனைக்கு : அதிர்ச்சி விளம்பரம்.!

19

girl-ap-v4-300x225தங்களிடம் பாலியல் அடிமைகளாக இருக்கும் பெண்களை பேஸ்புக் மூலம் விற்பனை செய்யும் முயற்சியில் ஐ.எஸ். அமைப்பு தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பல இளம்பெண்களை பிடித்து வைத்து பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல் அவ்வப்போது அவர்களை பொது இடங்களில் ஏலமும் விடுவார்கள்.
இப்போது அவர்கள் பேஸ்புக் வழியாகவும் பெண்களை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மே 20 ஆம் திகதி, அபு ஆசாத் அல்மேனி என்ற ஐ.எஸ். தீவிரவாதி ஒரு பதிவை வெளியிட்டார். அதில் “அடிமையை விலைக்கு வாங்க விரும்பும் எல்லா சகோதரர்களுக்கும், இது 8 ஆயிரம் அமெரிக்க டொலர் மதிப்புடையது” என்று கூறி ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
அதில், 18 வயது கொண்ட ஒரு இளம்பெண் முகத்தில் கருப்பு துணி சுற்றிய நிலையில் அமர்ந்திருக்கிறார். அந்த பெண் விற்பனைக்கு என்று அந்த தீவிரவாதி குறிப்பிட்டிருந்தார். இது பரபரப்பை கிளப்பியது.
மேலும், அழுது கண்கள் சிவந்து முகம் வாடிய நிலையில் இருக்கும் மற்றொரு இளம்பெண்ணின் புகைப்படத்தை பதிவு செய்து, இவளும் விற்பனைக்குத்தான். உங்களுக்கு வேண்டுமா… வேண்டாமா… என்று கேட்டுள்ளார். சில மணி நேரங்களில் பேஸ்புக் நிறுவனம் அந்த புகைப்படங்களை நீக்கிவிட்டது.
ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஏராளமான இளம் பெண்களை பிடித்து வைத்து பாலியல் அடிமைகளாக பயன்படுத்துகிறார்கள் என்ற உண்மை, உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.