Home இரகசியகேள்வி-பதில் படுக்கையிலேயே சிறுநீர் கழித்து விடுகிறேன்-சொல்லவும் வெட்கமாக உள்ளது

படுக்கையிலேயே சிறுநீர் கழித்து விடுகிறேன்-சொல்லவும் வெட்கமாக உள்ளது

40

kambitamil doctor tips, tamil sex doctor tips, eppadi pennai santhosa pauththuwaathu, tamilsexdoctor.com, tamilsex.com, sex kelvi pathilkal, tamil sex kelvi pathilkal, sex kelvikal,kama kelvi,sex kelvi pathil,paliyalkelvi pathil,antharanka elvi patil,udaluravu kelvikal.,kelvi,sex kelvi,அன்புள்ள அம்மா —
நான் உங்கள் மகளாக இருந்தால், என்ன அறிவுரை கூறுவீர்களோ, அதையே எனக்கும் கூறுங்கள். நான், 22 வயது பெண். இவ்வயது பெண்கள் அனைவரும் காதல், திருமணம் என்று யோசித்துக் கொண்டிருப்பர்; ஆனால், என் பிரச்சனை சற்று வித்தியாசமானது. என் வயதொத்த பெண்களின் ஆசை, பாசம் எல்லாம் எனக்கும் உள்ளது. ஆனால், என்னுடைய பிரச்சனை, அதற்கெல்லாம் தடுப்பு போட்டுக் கொண்டே இருக்கிறது. நான் பிறந்தது முதலே, பகலில் மற்றவர்களைப் போல், அனைத்து வேலைகளை செய்யும் என்னால், இரவில் தூங்கிய பின், சிறுநீர் வருவதை உணர முடியவில்லை. ண் இதனால், படுக்கையிலேயே சிறுநீர் கழித்து விடுகிறேன். படுக்கை நனைந்த பின் தான், எனக்கு விழிப்பு வருகிறது. இது, எதனால் ஏற்படுகிறது என்பதை, அறியவே முடியவில்லை; வெளியில் சொல்லவும் வெட்கமாக உள்ளது. அதிலும், அந்த மூன்று நாட்களில், இரவெல்லாம் மிகவும் அருவருப்பாக உள்ளது.
எட்டு அல்லது ஒன்பது வருடங்களுக்கு முன், ஒரு பெண் மருத்துவரிடம் கேட்டதற்கு, அவர் வாய்விட்டு சிரித்தே விட்டார். அப்படியொரு அவமானத்தை, இனி என்னால் தாங்க முடியாது.
அதன்பின், அலாரம் வைத்து எழ முயற்சி செய்தேன். ஒரு சில நாட்களில், அலாரம் அடிப்பதற்கு மூன்று மணி நேரங்களுக்கு முன், சிறுநீர் கழித்து விடுகிறேன்; அதனால், அலாரமும் பயன் இல்லை. சில சமயங்கள், இரவு உணவு உட்கொள்ளாமல், நீர் அதிகமாக அருந்தாமல் இருந்து தடுக்கப் பார்க்கிறேன்; அதுவும் வெற்றியடையவில்லை. ஆனால், ஒரு சில நாட்கள் மட்டும் அரிதாக விழிப்பு வந்து, நானே எழுந்து கொள்கிறேன். என் வீட்டைத் தவிர, வேறு எங்கும் தங்குவது இயலாத ஒன்றாக இருக்கிறது.

இதனால், கல்லூரி சுற்றுலா, என் தாத்தாவின் இறுதிச்சடங்கு அன்றும் இரவில் தங்க, என்னால் முடியாமல் போய்விட்டது. எங்கு சென்றாலும், இரவு வீடு நோக்கியே வரவேண்டிய சூழ்நிலை எனக்கு.
இவற்றையெல்லாம் விட, திறமையும், தகுதியும் இருந்தும் கூட, வெளியூர் கல்வி நிறுவனத்தில், என்னுடைய மேற்படிப்பை படிக்க முடியவில்லை. விடுதியில், மற்ற அனைவருடன் எப்படி என்னால் தங்க முடியும்?
இப்போதைய நிலை இது. இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளில், நிச்சயம் என் திருமணத்தை முடிக்க வேண்டும் என, பெற்றோர் நினைக்கின்றனர். என்னுடைய பிரச்னையை அவர்களிடம் கலந்து பேச முடியவில்லை.
படித்துக் கொண்டிருக்கிறேன் என்ற போர்வையில், பெண் கேட்டு வரும் உறவினர்களை, திருப்பி அனுப்பி கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு ஆண்டுகளில், என்னுடைய படிப்பும் முடிந்து விடும். அதன்பின் என்ன செய்வது? திருமணம் செய்யும்படி சொல்லும் பெற்றோர், உறவினர்களுக்கு என்ன கூறுவது?
மேற்படி எண்ணங்கள் இப்போதெல்லாம், நான் செய்யும் ஒவ்வொரு வேலையையும் பாதிக்கிறது. அதனால், பத்திரிகையில், வெளியிடப்படும் மருத்துவம் தொடர்பான கேள்வி பதில் பகுதிக்கும், என் பிரச்னையை எழுதி அனுப்பினேன்; ஆனால், பதில் வரவே இல்லை.
மிகுந்த யோசனைக்குப் பின், வெளிப்படையான உணர்வுடன், தாயிடம் கூட பகிர்ந்து கொள்ளாத என் பிரச்னையை, உங்களை தாயாகக் கருதி, வழி கேட்கிறேன். தயவு கூர்ந்து ஒரு நல்வழி தாருங்கள்.
ஆணாக இருந்திருந்தால் கூட, உலகம் என்னை தனியாக வாழவிடும்; நான் ஒரு பெண். என் எதிர்காலம் என்னவாகும்?
எனக்கு எந்த ஒரு குறையும் வைக்காத என் பெற்றோருக்கு, நான் ஒரு பாரமாகிவிடப் போகிறேனோ என்ற எண்ணம், என்னை சித்ரவதை செய்கிறது; என் அமைதியை பறிக்கிறது. உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும்,

— பெயர் வெளியிட விரும்பாத இளம் பெண்.
குறிப்பு: இப்பிரச்னையை நான் இதுவரை என் தோழிகளிடம் கூட பகிர்ந்ததில்லை. தற்போது நான் நம்பி இருப்பது, உங்களை மட்டுமே.

அன்புள்ள மகளுக்கு —

உன் கடிதம் கிடைத்தது. உன் பிரச்னையை ஆங்கிலத்தில், “பெட் வெட்டிங்’ என்பர். இதற்கு அலோபதியில் தகுந்த மருத்துவம் இருக்கிறதோ, இல்லையோ, ஓமியோபதியில் நிரந்தர குணம் தரும் மருந்து இருக்கிறது.
இரவில், படுக்கையில் அனிச்சையாக சிறுநீர் கழித்து விடுவதற்கு, கீழ்க்கண்ட காரணிகள் காரணமாக இருக்கலாம்.
1. வயிற்றில் கீரிபூச்சி, நாக்குபூச்சி, நாடாபுழுக்கள் இருந்தால், அவற்றால், சிறுநீர்ப் பைக்கு பாதிப்பு ஏற்படும்.
2. குதம், இரைப்பையின் நுழைவுப் பகுதி, முடிவுப் பகுதி மற்றும் சிறுநீர்ப்பையில் சுருக்கு தசைகள் அமைந்திருக்கும். சிலருக்கு சிறுநீர்ப்பையின் சுருக்குதசை பலவீனமாக இருக்கும். அதனால், இரவில் படுக்கையை நனைப்பர்.
3. பொதுவான உடல் பலவீனம்.
4. மனோதத்துவ ரீதியான காரணங்களும் உள்ளன. இருட்டுக்கு பயப்படுதல், கெட்ட கனவுகள் காணுதல், குழப்பமான மனநிலை.
5. இளம்பிராய நீரழிவு நோய்.
6. இனிப்பு வகைகளை அதிகமாக சாப்பிடுதல், தவறான உணவு பழக்க வழக்கம்.
7. அடிக்கடி, “யு.டி.ஐ.,’ எனப்படும் சிறுநீர் புறப்பாதை நோய் தொற்றுகள், பிறவி உறுப்பை சுத்தமாக பராமரிக்காதிருத்தல்.
8. அறுபது வயது தாண்டிய வயோதிகர்களுக்கு இருக்கும் பொது பிரச்னை இது.
9. வயிறு, குடல் தொடர்பான நோய்கள் இருந்தாலும், சிறுநீர்ப்பை மேலிருந்து கீழாக நசுக்கப்படலாம்.
10. படுக்கை நனைப்பு மரபியல் ரீதியாய் தொடரும் மருத்துவ பிரச்னை அல்ல.
11. நீண்ட நாள் குடிநோயாளிகள் இரவில் படுக்கையை நனைப்பர்.
மகளே… உன் விஷயமாக இக்பால் எனும் ஓமியோபதி மருத்துவரை கலந்தாலோசித்தேன். உன் பிரச்னையை கேட்டு கேலியாய் சிரித்த மருத்துவர் ஓர் அமெச்சூர் என்கிறார் அவர்.
குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு, அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்கு ஓமியோபதி மருந்து சாப்பிட்டு, உன் பிரச்னையை நிரந்தரமாக குணப்படுத்தலாம். நோயாளி முன்னிரவில் சிறுநீர் கழிக்கிறாரா, பின்னிரவில் சிறுநீர் கழிக்கிறாரா எனப் பார்த்து, ஓமியோ மருந்து தரப்படுகிறது.
தற்காலிகமாக நீ வெளியூர் சென்று இரவு தங்க நேரிடுகையில், “டயாபர்’ அணிந்து, காலையில் விட்டெறிந்து விடு. வயிற்றிலுள்ள பூச்சிகளை அழிக்கவும், சிறுநீர்ப்பையின் சுருக்குதசையைப் பலப்படுத்தவும், ஓமியோ மருந்து தரப்படுகிறது.
ஓமியோ மருந்து சாப்பிடும் போது, காபி, மீன், கருவாடு தவிர்க்க வேண்டும். ஓமியோ மருந்து கடைகளுக்கு சென்று, படுக்கை நனைப்பு எனக்கூறி, தானே மருந்து உட்கொள்ளக் கூடாது.
படுக்கையில் சிறுநீர் கழிப்பவர்களில் ஆயிரம் வகை உண்டு. அரசு அங்கீகாரம் பெற்ற, இளங்கலை ஓமியோபதி மருத்துவர்களிடம் போவது நல்லது. அவர் உங்களை முழுமையாக விசாரித்து, உங்களுக்குரிய மருந்தைத் தருவார்.
ஓமியோபதி மருந்துகள் பெரும்பாலும், பத்து நாளைக்கு தான் கொடுப்பர். மாத சிகிச்சை என்றால், ஆறு தடவை மறக்காமல் சென்று, மருந்து பெற்று உட்கொள்ள வேண்டும்.
“சாவ்லான்’ அல்லது “டெட்டால்’ கலந்து, வெதுவெதுப்பான நீரை வைத்து காலை, மாலை இருவேளை பிறப்பு உறுப்பை சுத்தம் செய்யலாம். சுத்தமாக துவைத்த காட்டன் உள்ளாடை அணிய வேண்டும்.
சிறுநீர் காரத்தன்மை உடையது. அது தொடைப்பகுதியின் இடுக்குகளில் தங்கி, சந்தி அழல் ஏற்படுத்தி விடும். பூஞ்சை காளான் பாதிப்பு வரும். ஆன்ட்டி பங்கல் பவுடர் அல்லது கிரீம் உபயோகித்து, கிருமி தொற்றை அகற்றலாம்.
நோயாளிகளுக்கு, பெரிய அளவில் கவுன்சலிங் தேவையில்லை. அந்த மூன்று நாட்களில் நீ பயன்படுத்தும் நாப்கின்கள் தரமானதாய் இருக்கட்டும். தலையணை உறை, படுக்கை விரிப்பு இரண்டு நாளைக்கு ஒரு முறை மாற்று. படுக்கையறையில், சிவப்பு தவிர்த்த பச்சை, ஆரஞ்சு நிற, “ஜீரோ வால்ட் பல்பு’ எரியவிடு.
ஓமியோபதி மருந்து உட்கொள்ளும் போது, “இனி, நான் ஒரு போதும், மூச்சா பாப்பா அல்ல…’ என, சுயவசியம் செய்து கொள். மாலை ஏழு மணியிலிருந்து, தூங்கப் போகும் வரை, நீர் அருந்துவதை குறைத்துக் கொள். இந்த சிறு பிரச்னைக்கு போய், “நான் ஆணாக இல்லையே…’ என்ற புலம்பல் எதற்கு?
நீ எந்த மதத்தை சேர்ந்தவளாக இருந்தாலும், வேத புத்தகத்தை தலையணைக்கு அடியே வைத்து தூங்கு. கல்யாண ஆசை வந்து விட்டாலும், இரவில் மன்மதக் கனவுகள் வந்து படுக்கையை நனைக்கும். ஆகவே, ஓமியோ மருந்தை இரு மாதம் உட்கொண்டு, முடித்தபின் வேலைக்கு போ. திருமணம் செய்து கொள்.
பெஸ்ட் ஆப் லக் செல்லக்குட்டி!