Home அந்தரங்கம் தாம்பத்திய உறவால் கருத்தரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

தாம்பத்திய உறவால் கருத்தரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

129

பொதுவெளியில் இதைப்போன்ற கேள்விகளை கேட்க தயங்குவதால்தான் முறையற்ற கருக்கலைப்புகள் அதிகமாகின்றது. கருப்பை ஒன்றும் குப்பைக்கூடையல்ல, அடிக்கடி கொட்டிக்கழுவுவதற்க்கு. அது மிகவும் மென்மையானது, புனிதமானது. கருத்தரித்தலை தவிர்க்க நிறைய வழிமுறைகள் உள்ளன என்கிறார் மருத்துவர் செந்தில் குமார். அவற்றை பற்றிய தொகுப்பை அடுத்து பார்க்கலாம்.

#1. விந்து வரும்போது பிறப்புறுப்பை வெளியே எடுத்துவிடுவது சிறந்த பலனை கொடுக்கும். உணர்ச்சி வேகத்தில் எடுக்க தவறிவிட்டால் பிரச்சனையே.

#2. பாதுகாப்பான நேரங்களில் உடலுறவு கொள்ள வேண்டும். மாதவிடாய் வருவதற்கு முன்பு, பின்பு என்று சில நாட்கள் வரைமுறை உண்டு. ஆனால் மூட் எப்ப வரும் என்று கனிக்க முடியாது. இதில் சக்ஸஸ் ரேட் மிக குறைவு.

#3. கருத்தடை மாத்திரைகள் எடுக்கலாம். ஆனால் இதனால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல் எடை அதிகரிப்பது போன்ற பிரச்சனை வரலாம்.

#4. பெண்கள் காண்டம் பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்தும் போது சில நேரங்களின் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அசவுகரியம் ஏற்படலாம்.

#5. IUCD எனப்படும் சாதனத்தை பயன்படுத்தலாம். இது கருத்தரித்தலை நன்கு தடுக்கும். ஆனால் அதிக ரத்தப்போக்கு மற்றும் உடல் எடை கூடுதல், போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

#6. ஆண்கள் காண்டம் தான் இருப்பதிலேயே மிகவும் பாதுகாப்பானது, உபயோகிப்பது எளிது. எவ்வித பின் விளைவுகள் பக்க விளைவுகள் கிடையாது. ஆனால் தரமான காண்டம் உபயோகிக்க வேண்டும்.

#Just Try : ஆண்கள் காண்டத்தில் பலவகைகள் உள்ளன, முறையாக உபயோகிக்கும்போது நல்ல பலன் கிடைக்கும். உயவுத்தன்மை இருப்பதால் விந்து முந்துதல் தடுக்கப்படுகிறது. இதனால் துணை உச்சநிலை அடைய வாய்ப்புகள் அதிகம்.

Previous articleபுள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?’ இந்த புதிருக்கான அர்த்தம் என்ன தெரியுமா?
Next articleஆண்களிடம் பெண்கள் கண்டிப்பாக சொல்லக்கூடாத ரகசியங்கள்!