Home சூடான செய்திகள் ‘சார் ஒஸ்தாரா’… அமலா பாலைத் தொடர்ந்து த்ரிஷாவும் விலகல்!

‘சார் ஒஸ்தாரா’… அமலா பாலைத் தொடர்ந்து த்ரிஷாவும் விலகல்!

30

தெலுங்கில் ரவி தேஜா நடிக்கும் புதிய படமான சார் ஒஸ்தாரா, திடீர் பரபரப்புக்குள்ளாகியுள்ளது. காரணம் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட இரு முன்னணி நடிகைகள் திடீரென அடுத்தடுத்து விலகிக் கொண்டதுதான்.

‘சார் ஒஸ்தாரா’ படத்தில் இரு கதாநாயகிகள். ஒருவர் அமலா பால். தமிழில் நல்ல வாய்ப்பு வந்துள்ளதாலும், கால்ஷீட் தர முடியாததாலும் இந்தப் படத்திலிருந்து விலகுவதாக முதலில் அவர் அறிவித்திருந்தார்.

படத்தின் பிரதான கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தவர் திரிஷா. ரவி தேஜாவே விரும்பி இவரை சிபாரிசு செய்ததால் இயக்குநர் பரசுராம் ஒப்பந்தம் செய்தாராம்.

ஆனால் திரிஷா தற்போது திடீரென்று அப்படத்தில் நடிக்க முடியாது என கூறி விலகிவிட்டார். இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரவி தேஜாவும் அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டாராம்.

இதுகுறித்து திரிஷா கூறுகையில், “ஏற்கனவே சில பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளளேன்.

அப்படங்களுக்கு ஒதுக்கிய தேதிகளில் ‘சார் ஒஸ்தாரா’ படத்தில் நடிக்க கேட்டனர். அது முடியாது என்பதால் படத்தில் இருந்து விலகிவிட்டேன்,” என்றார்.

ரவிதேஜா படத்தில் ரொம்பவும் கவர்ச்சியாக நடிக்க வேண்டியிருந்ததால்தான் த்ரிஷா விலகிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

Previous articleஜூன் 8-ம் தேதி பில்லா-2?
Next articleவிரல்களை அழகாக்கும் மசாஜ்!