Home பெண்கள் அழகு குறிப்பு விரல்களை அழகாக்கும் மசாஜ்!

விரல்களை அழகாக்கும் மசாஜ்!

24

பொதுவாக தலை, கழுத்து போன்ற பகுதிகளில் தான் மசாஜ் செய்வோம். ஆனால் கை மற்றும் விரல்களுக்கு மசாஜ் செய்வதால் உடல் ரிலாக்ஸாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. அதிலும் விரல்களை அதிகம் பயன்படுத்தி வேலை செய்வோர் அதாவது டைப் செய்வோர்கள் கை மற்றும் விரல்களுக்கு மசாஜ் செய்வது மிகவும் நல்லது. நாள் முழுவதும் டைப் செய்து, செய்து விரல்கள் வலி எடுக்கும். அவர்கள் இந்த மசாஜை செய்து கொண்டால் வலி நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.

எப்படி மசாஜ் செய்ய வேண்டும்?

முதலில் சிறிது எண்ணெய்யையோ அல்லது கைகளுக்கு தடவும் லோஷனையோ கைகளில் தடவவும். பின் மெதுவாக அந்த எண்ணெய்யோ அல்லது லோஷனையோ தோலில் ஊடுருவு‌ம் வரை ந‌ன்கு மசா‌ஜ் செ‌ய்ய வே‌ண்டு‌ம். அதன் பிறகு வைட்டமின் ஈ உள்ள எண்ணெய்யை எடுத்து கை, விரல்களில் தடவி மசாஜ் செய்யவும். முக்கியமாக மணிக்கட்டு, உள்ளங்கை ஆகிய இடத்தில் நன்கு மசாஜ் செய்யவும்.

மசாஜ் செய்யும் போது ஒவ்வொரு விரல்களுக்கிடையேயும் பெருவிரலை மெதுவாக விட்டு விட்டு செய்ய வேண்டும்.

இப்படி அடிக்கடி செய்து வர உடல் ரிலாக்சாக இருக்கும். விரல்களில் இருக்கும் நரம்புகள் மணிக்கட்டுகளில் இணைவதால் மணிக்கட்டில் மசாஜ் செய்வது புத்துணர்ச்சியைத் தரும்.

மேலும் கை ‌விர‌ல்க‌ள் அழகாக இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் அவ‌ற்று‌க்கு நெய்ல் பாலிஷ் அடி‌த்தா‌ல் மட்டும் போதாது இந்த மாதிரியான மசாஜை செய்து முறையாக‌ப் பராம‌ரி‌‌த்து வ‌ந்தா‌ல் தா‌ன் நக‌ங்களு‌ம் அழகாக‌வும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.