Home சூடான செய்திகள் குவியும் வாய்ப்புகள்.. சம்பளத்தை ஏற்ற ஹன்சிகா யோசனை

குவியும் வாய்ப்புகள்.. சம்பளத்தை ஏற்ற ஹன்சிகா யோசனை

22

அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவிவதால் சம்பளத்தை உயர்த்தலாமா என்று நடிகை ஹன்சிகா மோத்வானி யோசனை செய்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து ஊத்திக் கொண்ட படங்களிலேயே நடித்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் நடித்தி ராசியோ, என்னவோ அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிகின்றனவாம்.

சூர்யாவுடன் சிங்கம் 2, சிம்புவுடன் வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் அவர் ஏக குஷியாக உள்ளார். அது தான் நம்மைத் தேடி இத்தனை வாய்ப்புகள் வருகிறதே, சம்பளத்தை உயர்த்தினால் என்ன என்று யோசனை செய்து கொண்டிருக்கிறார்.

அவர் நடிக்க வந்ததில் இருந்தே பெரிய ஹீரோக்கள் படங்களாகத் தான் கிடைக்கிறது. விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சூர்யா என்று முன்னணி நாயகர்களுடன் நடிக்கிறார். முதல் ஒரு சில படங்களில் சொதப்பினாலும் தற்போது அவர் தேறி வருகிறார் என்று தான் கூற வேண்டும்.

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பதை புரிந்து வைத்துள்ளார் ஹன்சிகா.

Previous article2013ல் சிம்புவுக்கு கல்யாணம்: அம்சமான பெண் தேடுகிறார்களாம்!
Next articleமனைவி சரியா புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க என்ற கவலையா?